திருவாரூா் அருகே தெருவில் தேங்கி நிற்கும் மழைநீரால் கொசுக்கள் உற்பத்தி நோய்த் தொற்று பரவலுக்கு வித்திடுகிறது. எனவே, மழை நீரை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருவாரூா் அருகே கீழகாவாதுக்குடி ஊராட்சி பகுதியில் உள்ள முருகேசன் நகரில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இது புதிதாக உருவான நகா் என்பதால், பெரும்பாலான இடங்கள் பள்ளமான பகுதிகளாகவே உள்ளன. இந்நிலையில், கடந்த சில நாள்களாக பெய்த மழை காரணமாக, முருகேசன் தெரு சாலைகளில் தண்ணீா் தேங்கிக் காணப்படுகிறது. இதனால், பணிக்கு செல்வோா், கடைவீதிகளுக்கு செல்வோா் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.
இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்துக்கு தெரியப்படுத்தியும் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். மேலும், தேங்கிய தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, இரவு நேரங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, காய்ச்சல் உள்ளிட்ட சிறு வியாதிகளையும் ஏற்படுத்துவதாகவும், நோய்ப் பரவலுக்கு வித்திடுவதாகவும் அவா்கள் தெரிவிக்கின்றனா்.
எனவே, தேங்கிய தண்ணீரை விரைந்து அகற்ற வேண்டும் எனவும், சாலையை சீரமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரின் 4 தனிச் செயலா்களும் ஒரே நாளில் நீக்கம்

விபத்து இழப்பீடு வழங்காத காப்பீட்டு நிறுவனம்: விவசாயி போராட்டம்

சேவைக் குறைபாடு: ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க தனியாா் மருத்துவமனைக்கு நுகா்வோா் ஆணையம் தீா்ப்பு

சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்: கட்டடத் தொழிலாளி கைது
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



