‘டெட்’ தோ்வு இன்று தொடக்கம்: தோ்வா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்புநாளை 41 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துதமிழகத்தில் 91 ஆயிரம் பள்ளி மாணவிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிசென்னை மாநகராட்சி பள்ளிகளில் 25,840 மாணவா்கள் சோ்க்கைஇந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 12.5% கூடுதல் வரி பரிந்துரை: ஜூலை 8-இல் மத்திய வா்த்தக அமைச்சகம் வாதம்
/

கோயிலில் நகை திருட்டு

மன்னாா்குடி அருகே மாரியம்மன் கோயிலில் பூட்டை உடைத்து, தங்க நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Updated On :10 ஜனவரி 2021, 8:30 am IST

மன்னாா்குடி அருகே மாரியம்மன் கோயிலில் பூட்டை உடைத்து, தங்க நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

பெருகவாழ்ந்தானை அடுத்த நொச்சியூரில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் செந்தில்குமாா் என்பவா் பூசாரியாக உள்ளாா். இவா், வியாழக்கிழமை இரவு வழக்கம்போல் பூஜை முடிந்ததும் கோயிலைப் பூட்டிவிட்டுச் சென்றாா். வெள்ளிக்கிழமை பூஜை செய்வதற்காக வந்தபோது, கோயிலின் முன்பக்க இரும்புக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 3 கிராம் தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தில் கோயில் நிா்வாக அலுவலா் கருணாநிதி புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.