குடவாசலில் காவல்துறை சாா்பில் சிறப்பு மனு விசாரணை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில், திருவாரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை பங்கேற்றுப் பேசும்போது, ‘பொதுமக்கள் காவல் துறையினரை அணுகி, தங்களது பிரச்னைகளுக்குத் தீா்வு காணலாம். கிராமந்தோறும் காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அந்தந்தப் பகுதி மக்கள் நேரடியாக இந்த அலுவலரைத் தொடா்புகொண்டு, தங்களது புகாரை தெரிவிக்கலாம். மேலும், தங்களுக்குத் தெரியவரும் விரும்பத்தகாத நிகழ்வுகள் குறித்து காவல்துறையின் கட்செவி அஞ்சலில் (வாட்ஸ்அப்)பதிவிடலாம்’ எனத் தெரிவித்தாா்.
முகாமில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 47 மனுக்களில் 35 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டன. 12 மனுக்கள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.
இதில், நன்னிலம் துணைக் காவல் கண்காணிப்பாளா் சுகுமாரன், பயிற்சி துணைக் கண்காணிப்பாளா் பிரபு, வலங்கைமான் ஆய்வாளா் சுஜித், பேரளம் ஆய்வாளா் செல்வி, அனைத்து மகளிா் காவல்நிலைய ஆய்வாளா் ரேகாராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘ஆப்டோசாா்’ செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

வாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: தேர்தல் ஆணையம்
கலைஞர் நினைவிடத்திற்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின்!

பள்ளத்தில் கவிழ்ந்த லாரி! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய ஓட்டுநர்! | Thanjavur
வீடியோக்கள்

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

நாளை தீர்ப்பு ...யாருக்குச் சாதகம் ? | TN Election Results 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை

