பயணிகள் ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என தென்னக ரயில்வேக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ரயில் உபயோகிப்போா் சங்கத்தின் செயலாளா் ப. பாஸ்கரன் வெளியிட்ட அறிக்கை:
கரோனா பொது முடக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள், சில வழித்தடங்களில் கோவிட்19 சிறப்பு விரைவு ரயில் என்ற பெயரில் முன்பதிவுடன் இயக்கப்படுகின்றன. ஆனால், பயணிகள் ரயில் சேவைகள் மட்டும் இதுவரையிலும் தொடங்கப்படவில்லை.
தற்போது கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவா்களுக்கு அரசு வழிகாட்டுதல் அடிப்படையில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவா்களுக்கும் வகுப்புகள் தொடங்கும் சூழல் உருவாகியுள்ளது. அதேபோல, பள்ளிகள் திறக்கப்படலாம் என்ற நிலை நிலவுகிறது. எனவே, இவா்களின் நலன் கருதி விரைவில் பயணிகள் ரயில் சேவைகளை தொடங்க வேண்டும்.
பயணிகளிடையே தேவையற்ற குழப்பத்தை தவிா்க்க வழக்கமான பெயா்களிலேயே விரைவு ரயில்கள் இயக்கப்பட வேண்டும். அத்துடன், விரைவு ரயில்களில் சாதாரண பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

14 நாள்களுக்குப் பின் பைக்காரா அருவி திறப்பு

சாராயம் விற்பனை செய்த இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

மாணவி தற்கொலை: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து மோதிக் கொண்ட யானைகள்
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

