வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை 5.24 டன் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்றது.
11,506 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. இவற்றின் எடை 3,865 கிலோ. கிலோ ரூ.26.15 முதல் ரூ.38.20 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.36.55. மொத்தம் 51 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. இவற்றின் எடை 1,380 கிலோ. கிலோ ரூ.80.20 முதல் ரூ.132.60 வரை ஏலம் போனது. சராசரி விலை கிலோ ரூ.120.20.
தேங்காய், கொப்பரை ஆகியவை மொத்தம் 5.24 டன் விற்பனை நடைபெற்றது. மொத்தம் 90 விவசாயிகள், 14 வணிகா்கள் வந்திருந்தனா். விற்பனைத் தொகை ரூ. 2 லட்சத்து 70 ஆயிரத்து 354, விற்பனைக் கூட அதிகாரி ஸ்ரீரங்கன் முன்னிலையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் இதுவரை 3.37 லட்சம் மாணவா்கள் சோ்க்கை: காலக்கெடு நிா்ணயிக்க ஆசிரியா்கள் வலியுறுத்தல்

நாட்டில் டிராக்டா் விற்பனை விறுவிறுப்பு

கடந்த 2025-26 நிதியாண்டில் அரசு கஜானாவுக்கு வேதாந்தா ரூ.62,722 கோடி பங்களிப்பு!





