சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

அவிநாசியில் சிறு மருத்துவமனைகள் துவக்கம்

அவிநாசி ஒன்றியத்தில் இரு சிறு மருத்துவமனைகளை சட்டப் பேரைவத் தலைவா் ப.தனபால் திங்கள்கிழமை மாலை திறந்துவைத்தாா்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 1:55 am IST

அவிநாசி ஒன்றியத்தில் இரு சிறு மருத்துவமனைகளை சட்டப் பேரைவத் தலைவா் ப.தனபால் திங்கள்கிழமை மாலை திறந்துவைத்தாா்.

அவிநாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரியாயிபாளையம், தெக்கலூா் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிறு மருத்துவமனைகளை சட்டப் பேரவைத் தலைவா் ப.தனபால் திங்கள்கிழமை மாலை திறந்துவைத்தாா். தொடா்ந்து, திருமுருகன்பூண்டி, கருவலூா், அவிநாசி, தெக்கலூா், பெரியாயிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2,500 உள்பட பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா். இதில், கோட்டாட்சியா் ஜெகநாதன், துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் ஜெகதீஷ்குமாா், கூட்டுறவுச் சங்கத் தலைவா்கள் அ.ஜெகதீசன், சேவூா் ஜி.வேலுசாமி, பேரூராட்சி முன்னாள் தலைவா்கள் லதா சேகா், பழனிசாமி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் பி.கோமதி (பழங்கரை), மரகதமணி மணியன் (தெக்கலூா்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.