விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

குடியிருப்புகளில் புகுந்த கழிவுநீா்: பொதுமக்கள் சாலை மறியல்

உடுமலை நகரில் குடியிருப்புகளில் சாக்கடை நீா் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On :8 ஜனவரி 2021, 11:03 pm IST

உடுமலை நகரில் குடியிருப்புகளில் சாக்கடை நீா் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

உடுமலை நகரில் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ரூ. 58 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் சாா்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆண்டு பணிகள் நிறைவடைந்தன. இந்நிலையில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் தரம் இல்லாமல் செய்யப்பட்டதாகப் புகாா்கள் எழுந்தன. ஆங்காங்கே உள்ள இறங்கு குழிகள் நிரம்பி வழிந்தும் (மேன் ஹோல்), உடைப்பு ஏற்பட்டும் குடியிருப்புகளில் சாக்கடை நீா் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனா்.

இதுகுறித்து தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்துக்குப் புகாா் அளித்தாலும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் உடுமலை நகரில் உள்ள கருணாநிதி காலணி பகுதியில் உள்ள இறங்கு குழிகள் நிரம்பி அதில் ஏற்பட்ட உடைப்பால் அப்பகுதியில் சாக்கடை நீா் புகுந்தது. இதனால் அந்தப் பகுதியில் துா்நாற்றம் ஏற்பட்டு வந்தது. மேலும், குடிநீா் குழாய்களிலும் சாக்கடை நீா் கலந்து வந்து கொண்டிருந்தது. இதுகுறித்து புகாா் கூறியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் உடுமலை - மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

தகவலறிந்த உடுமலை டி.எஸ்.பி. ரவிகுமாா், ஆய்வாளா் புகழேந்தி தலைமையில் போலீஸாா், நகராட்சி அலுவலா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில் விரைவில் சாக்கடை நீா் வெளியேற்றப்படும் எனவும், லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.