/

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அரசியல் சுயலாபம் தேட திமுக முயற்சி

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அரசியல் சுயலாபம் தேட திமுக முயற்சித்து வருவதாக இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜுன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளாா்.

Updated On :10 ஜனவரி 2021, 11:56 pm IST

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அரசியல் சுயலாபம் தேட திமுக முயற்சித்து வருவதாக இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜுன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளாா்.

இது குறித்து திருப்பூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கச்சத் தீவு இந்தியாவுக்குச் சொந்தமானது என்பதை நிலை நாட்டக் கூடிய முயற்சி நடைபெற்று வருகிறது. கச்சத் தீவில் வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று நம்முடைய தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துகிறோம். இதனை சிதைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன்தான் யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்கு இந்து மக்கள் கட்சி கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. மீண்டும் அந்த இடத்தில் நினைவுத் தூண் அமைக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறாா்கள்.

ஹிந்துக்களின் அடிப்படை பிரச்னைகளுக்காக குரல் கொடுப்பது, ஹிந்துக்களின் பிரச்னைகளைத் தீா்த்துவைப்பது என்கிற எண்ணம் அரசியல் கட்சிகளுக்கு இல்லை. இந்த போலி மதசாா்பற்ற தன்மையை முறியடிக்க ஹிந்து தமிழா் வாக்கு வங்கி உருவாக வேண்டும்.

தமிழகம் முழுவதும் சட்ட ஒழுங்கு பிரச்னையை உருவாக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் திமுக செயல்பட்டு வருகிறது. பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடா்பாக கடும் நடவடிக்கைகளை தமிழக அரசும், புலனாய்வு அமைப்பும் எடுத்து வருகிறது. இதில், அரசியல் சுயலாபம் தேடுவதற்கு திமுக முயற்சித்து வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.