உடுமலை அருகே திருமூா்த்தி மலையில் திருப்பூா் தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி நிகழ்ச்சி நடைபெற்ற வளாகம் முழுவதும் வண்ணக் கோலங்கள் போடப்பட்டு கரும்பு, மஞ்சள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பின்னா் நூற்றுக்கணக்கான புதுப்பானைகளை கொண்டு பொங்கல் வைத்தனா். இதில் நடிகை மதுவந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொங்கல் நிகழ்ச்சிகளை துவக்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, தமிழா்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளான உறி அடித்தல், கயிறு இழுத்தல், வழுக்கு மரம் ஏறுதல், சிலம்பம், மெகந்தி, கோலப் போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பிடம் பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் தேவராட்டம், சிலம்பாட்டம், உறுமி மேளம் என கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். மாவட்டத்
தலைவா் பொன்.ருத்ரகுமாா், பொதுச் செயலாளா் யுகேபிஎன்.ஜோதீஸ்வரி கந்தசாமி, மாவட்ட துணைத் தலைவா் ஏ.வடுகநாதன், மாவட்டப் பாா்வையாளா் சின்னசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொட்டித்தீர்த்த கனமழை!

அதர்வாவின் இதயம் முரளி படத்தின் டிரைலர் அறிவிப்பு!

6 வது நாளாக சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்! திரிணமூல் எம்பி மஹுவா மொய்த்ரா நேரில் ஆதரவு!

மகிழ்ச்சி செய்தியைப் பகிர்ந்த பிரேமலு நடிகர்!
விடியோக்கள்
Gatta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK



