காங்கயம்: காங்கயத்தில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 104 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதையை செலுத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் பேருந்து நிலையம் முன்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாவட்ட வேளாண் விளைபொருள் விற்பனைக் குழு தலைவர் வெங்கு ஜி. மணிமாறன் தலைமை வகித்தார்.
இதில், அதிமுக மாவட்டப் பொருளாளர் கேஜிகே.கிஷோர்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., செல்வி முருகேசன், காங்கயம் கூட்டுறவு சங்கத் தலைவர் என்.பாலகிருஷ்ணன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலர் ஏ.பி.துரைசாமி, அதிமுக மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலர் கே.கே.பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










