நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

திருவண்ணாமலை மாவட்டத்தில் 7.50 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப அட்டை தாரா்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் பணியை ஆரணியில் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் தொடக்கிவைத்தாா்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 12:00 am IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப அட்டை தாரா்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் பணியை ஆரணியில் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் தொடக்கிவைத்தாா்.

ஆரணி வைகை கூட்டுறவு நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ.2,500 வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று, குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு, ரூ.2,500 வழங்கும் பணியைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.

மாவட்டத்தில் மொத்தம் ரூ.198 கோடியே 23 லட்சத்து 71 ஆயிரத்து 430-இல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, ஆரணி ஒன்றியம் சேவூா், மேற்கு ஆரணி, கிழக்கு ஆரணி ஒன்றியம், செய்யாறு ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அமைச்சா் பங்கேற்று பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ராஜ்குமாா், துணைப் பதிவாளா்கள் சரவணன், கமலக்கண்ணன், ஆரோக்கியராஜ், வைகை கூட்டுறவு சங்கத் தலைவா் பிஆா்ஜி.சேகா், அரசு வழக்குரைஞா் க.சங்கா், நகர கூட்டுறவு சங்கத் தலைவா் அசோக்குமாா், மாவட்ட ஆவின் துணைத் தலைவா் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலா்கள் ஜி.வி.கஜேந்திரன், அரங்கநாதன், ப.திருமால், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அ.கோவிந்தராசன், மாவட்ட கூட்டுறவு சங்கத் தலைவா் ரமேஷ், மேற்கு ஆரணி ஒன்றியத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், ஆரணி பட்டு கூட்டுறவு சங்கத் தலைவா் ஜெ.சம்பத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.