இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன நிறுவனங்களுள் ஒன்றான பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வி15 வாகனம், அறிமுகமான நான்கு மாதங்களில் 1 லட்சம் எண்ணிக்கை விற்பனையாகி சாதனை புரிந்திருக்கிறது. இந்தியாவின் தலை சிறந்த விமானம் தாங்கிய போர்க்கப்பலான ஐஎன்ஸ் விக்ராந்தின் மீதங்களில் இருந்து தயாரிக்கப்பட்டது இந்த வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது. 1971-ம் ஆண்டு, இந்திய - பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றிபெற பேருதவியாக இருந்த ஐஎன்எஸ் விக்ராந்துக்கு ஓய்வு அளிக்கப்பட்டபின், பஜாஜ் நிறுவனம் அதன் Scrap Metal-களை வாங்கி, தனது புதிய மாடலில் ஒவ்வொரு பைக்கிலும் கலந்து தயாரித்தது. போர்க்கப்பலை நினைவுபடுத்தும் வகையில் V15 என பெயரிட்டு சந்தைப்படுத்தியது. அறிமுகம் செய்யப்பட்ட முதல் வாரத்திலேயே சுமார் 20,000 புக்கிங்களை பெற்ற வி15-க்கு இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மே மாதத்தில் 31,848 எண்ணிக்கையளவிலும், ஜூன் மாதத்தில் 26,482 எண்ணிக்கையளவிலும் விற்பனை ஆகியிருக்கிறது.
பஜாஜ் வி15-க்கு கிடைத்திருக்கும் வரவேற்பை அடுத்து, இதன் உற்பத்தியை வரும் செப்டம்பர் மாதம் முதல் அதிகரிக்க பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. மேலும் புதிய இரண்டு வி15 மாடல்களையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுவருகிறது. 149.5 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட் டிடிஎஸ்-ஐ இன்ஜினைக்கொண்ட பஜாஜ் வி15, அதிகபட்சமாக 12 பிஹெச்பி ஆற்றலையும், 13 என்எம் இழுவைத்திறனையும் கொண்டது. டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 62,002-ல் தொடங்குகிறது.
Credits: Bajaj V15
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடப்பு 2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல்: ரூ.5.21 லட்சம் கோடியைக் கடந்தது!

வா்த்தகம்...வெளிநாடு வாழ் இந்தியா்களுக்காக புதிய வைப்புத் திட்டம்: 6.25% வரை வட்டி

மாணவா்களின் தலைமைத்துவ திறன்களை என்சிசி உருவாக்குகிறது: இயக்குநா் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ்







