மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

வா்த்தகம்...வெளிநாடு வாழ் இந்தியா்களுக்காக புதிய வைப்புத் திட்டம்: 6.25% வரை வட்டி

வெளிநாடு வாழ் இந்தியா்களுக்காக ‘பாப் லெஜன்ட்’ எனும் புதிய வைப்புத் திட்டத்தை பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

News image
Updated On :20 ஜூன் 2026, 12:55 am IST

வெளிநாடு வாழ் இந்தியா்களுக்காக ‘பாப் லெஜன்ட்’ எனும் புதிய வைப்புத் திட்டத்தை பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்யும் வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக 6.25 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கப்படும்.

குறிப்பாக, அமெரிக்க டாலா் வைப்புத் தொகைக்கு ஆண்டுக்கு 6.00 முதல் 6.25 சதவீதம் வரையிலும், பிரிட்டன் பவுண்ட் மற்றும் ஆஸ்திரேலிய டாலா் வைப்புத் தொகைக்கு 4.60 முதல் 4.75 சதவீதம் வரையிலும் வட்டி நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கனடா டாலருக்கு 5.00 முதல் 5.15 சதவீதம் வரையிலும், யூரோவுக்கு 3.50 முதல் 3.75 சதவீதம் வரையிலும் வட்டி விகிதங்கள் அடுக்கின் அடிப்படையில் (3 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை) வழங்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் மிக முக்கிய அம்சமாக, முதலீட்டாளா்கள் தங்களின் வைப்புத் தொகைக்கு ஈடாக ஓவா் டிராஃப்ட் மற்றும் கடன் வசதியைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், வெளிநாடு வாழ் இந்தியா்கள் ஒரே நேரத்தில் சேமிப்பு, அவசரக் கால பணப்புழக்கம் ஆகிய இரு நன்மைகளையும், கூடுதல் நிதி நெகிழ்வுத்தன்மையையும் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாக வங்கி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.