முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்திமக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!
/

எல்.ஐ.சி.க்குப் பங்குகளை அளித்து ரூ.58 கோடி திரட்டுகிறது அலகாபாத் வங்கி

பொதுத் துறையைச் சேர்ந்த அலகாபாத் வங்கி, முன்னுரிமை அடிப்படையில் எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு ரூ.58 கோடி மதிப்பிலான 1 கோடி பங்குகளை

Updated On :22 ஜூலை 2025, 2:57 pm IST

பொதுத் துறையைச் சேர்ந்த அலகாபாத் வங்கி, முன்னுரிமை அடிப்படையில் எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு ரூ.58 கோடி மதிப்பிலான 1 கோடி பங்குகளை ஒதுக்கீடு செய்து நிதி திரட்ட உள்ளதாக தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
 எல்.ஐ.சி. நிறுவனம் மற்றும் அதன் பல்வேறு திட்டங்களில் ரூ.10 மதிப்பைக் கொண்ட 1,32,44,282 பங்குகள் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. பங்கு ஒன்று ரூ.43.42-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் மூலம், அலகாபாத் வங்கிக்கு ரூ.58 கோடி கிடைக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அலகாபாத் வங்கியின் பங்குதாரர்கள் அடங்கிய பொதுக்குழு கூட்டம் மார்ச் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. பங்கு விற்பனை தொடர்பான இறுதி ஒப்புதல் அப்போது பெறப்படவுள்ளது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இந்தப் பங்கு விற்பனையையடுத்து, அலகாபாத் வங்கியில் எல்.ஐ.சி. கொண்டுள்ள பங்கு மூலதனம் தற்போதைய 12.61 சதவீதத்திலிருந்து, 14.50 சதவீதமாக அதிகரிக்கும்.
 அதேசமயம், மத்திய அரசு இந்த வங்கியில் கொண்டுள்ள பங்கு மூலதனம் 62.73 சதவீதத்திலிருந்து 61.38 சதவீதமாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.