மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் இறங்குமுகத்துடன் நிறைவடைந்தது.
கடந்த சில நாள்களாக பல முறை உச்சத்தைத் தொட்ட வர்த்தகம், இன்னும் சில நாள்களில் இந்த ஆண்டு நிறைவடைவதால் தொழில் ஒப்பந்தங்கள் காலாவதியாவதைக் கருதி மந்தமாக நடைபெற்றது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், அதிகப்பட்ச அளவாக 34,023 புள்ளிகளைத் தொட்டு, இறுதியில் 63 புள்ளிகள் (0.19 சதவீதம்) குறைந்து 33,848 புள்ளிகளாக நிறைவடைந்தது.
தேசியப் பங்கு சந்தையில், நிஃப்டி குறியீட்டு எண் 12.85 புள்ளிகள் (0.12) குறைந்து, 10,478-ஆக நிறைவுற்றது. இடைப்பட்ட நேரத்தில் 10,534 புள்ளிகளுக்கும், 10,460 புள்ளிகளுக்கும் இடையே நிஃப்டி குறியீட்டு எண் ஊசலாடிக் கொண்டிருந்தது.
இந்த மாதத்துடன் இந்த ஆண்டு நிறைவடைவதால், வணிக ஒப்பந்தங்களும் நிறைவடையும் என்பதைக் கருதி, பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை என்று பங்கு வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.