மிக குறைந்த வட்டியில் வீட்டு வசதிக் கடன்: தேனா வங்கி
பொதுத் துறையைச் சேர்ந்த தேனா வங்கி மிக குறைந்த வட்டியில் வீட்டு வசதிக் கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது.


பொதுத் துறையைச் சேர்ந்த தேனா வங்கி மிக குறைந்த வட்டியில் வீட்டு வசதிக் கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது.
சந்தையில் வீட்டு வசதிக் கடன் பிரிவில் பாரத ஸ்டேட் வங்கி மட்டுமே தற்போது 8.3 சதவீத வட்டியில் கடன் வழங்கி வருகிறது. இதற்கும் குறைவான வட்டி விகிதத்தில் எந்த வங்கியும் வீட்டு வசதிக் கடன் வழங்குவதாக தெரியவில்லை. இந்த நிலையில், தேனா வங்கி 8.25 சதவீத வட்டியில் வீட்டு வசதிக் கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது.
வீடு மற்றும் வாகன கடன் வர்த்தகத்தை அதிகரிக்கும் வகையில் தேனா வங்கி சிறப்பு கடன் மேளாவை தொடங்கியுள்ளது. இதில், ரூ.75 லட்சம் வரையிலான வீட்டு வசதிக் கடனுக்கு 8.25 சதவீத வட்டியிலும், கார் கடனுக்கு 9 சதவீத வட்டியிலும் கடன் வழங்கப்படும். மேலும், பரிசீலனைக் கட்டணம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வங்கி தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, கார் கடன் பெறும் மகளிருக்கு 8.90 சதவீத வட்டி மட்டுமே வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த வட்டி சலுகையை வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரையில் பெறலாம் என்று தேனா வங்கி தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...