ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான முதலீட்டில் தொடர் சரிவு

இந்திய பங்குச் சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்கேற்பு ஆவணங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் முதலீடு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதற்கு, அத்தகைய முதலீடுகளின் மீது செபி

News image
Updated On :22 ஜூலை 2025, 3:06 pm IST


இந்திய பங்குச் சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்கேற்பு ஆவணங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் முதலீடு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதற்கு, அத்தகைய முதலீடுகளின் மீது செபி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 
இதுகுறித்து செபி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அதிக சொத்து மதிப்பைக் கொண்ட வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்கேற்பு ஆவணங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் முதலீடு சென்ற ஜூலையில் ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, நடப்பாண்டு மே மாதத்தில் ரூ.93,497 கோடியாக இருந்த பங்கேற்பு ஆவண முதலீடு ஜூன் மாத இறுதியில் 83,688 கோடியானது. பின்னர் அதுவும் குறைந்து ஜூலை மாதத்தில் ரூ.80,341 கோடியாகியுள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு தற்போதுதான் பங்கேற்பு ஆவண முதலீடு இந்த அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. அந்த மாதத்தில் இந்த முதலீடு ரூ.72,314 கோடியாக காணப்பட்டது.
கடந்த ஜூலை மாதத்தில் பங்கேற்பு ஆவணம் மூலமாக மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீட்டில் பங்குகளில் மட்டும் ரூ.60,550 கோடி முதலீடு செய்யப்பட்டது. எஞ்சிய தொகை கடன் மற்றும் நிதி சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டது.
ஜூனில் 2.6 சதவீதமாக காணப்பட்ட இவ்வகை முதலீடு மதிப்பீட்டு மாதமான ஜூலையில் 2.4 சதவீதமாக குறைந்தது என்று செபி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நேரடியாக பதிவு செய்து கொள்ளாமல் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், அந்நிய நிதி நிறுவனங்கள் வெளியிடும் பங்கேற்பு ஆவணங்கள் மூலமாக முதலீடு செய்கின்றனர். ஆனால், இதன் மூலம் கருப்பு பணம் அதிகமாக முதலீடு செய்யப்படுவதாக எழுந்த புகாரையடுத்து செபி அதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.