முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 5.68 கோடி டன்னாக உயர்வு

உள்நாட்டில் உள்ள 12 முக்கிய துறைமுகங்கள் சென்ற ஏப்ரல் மாதத்தில் 5.68 கோடி டன் சரக்குகளை கையாண்டுள்ளன.
முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 5.68 கோடி டன்னாக உயர்வு
Updated on
1 min read

உள்நாட்டில் உள்ள 12 முக்கிய துறைமுகங்கள் சென்ற ஏப்ரல் மாதத்தில் 5.68 கோடி டன் சரக்குகளை கையாண்டுள்ளன.
இதுகுறித்து இந்திய துறைமுகங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2017-ஆம் ஏப்ரலில் 12 முக்கிய துறைமுகங்கள் 5.58 கோடி டன் சரக்குகளை கையாண்டிருந்தன. இந்த நிலையில், நடப்பு ஆண்டு ஏப்ரலில் இது 1.78 சதவீதம் அதிகரித்து 5.68 கோடி டன்னை எட்டியது.
துறைமுகங்கள் கையாண்ட ஒட்டுமொத்த சரக்கில், உரத்தின் பங்களிப்பு அளவின் அடிப்படையில் 3.6 லட்சம் டன்னிலிருந்து 60.66 சதவீதம் அதிகரித்து 5.8 லட்சம் டன்னாக காணப்பட்டது. கையாண்ட நிலக்கரி அளவின் அடிப்படையில் 24.34 சதவீதம் உயர்ந்து 96.9 லட்சம் டன்னாக காணப்பட்டது.
அதேசமயம் , இரும்புத் தாதுவின் பங்களிப்பு 24.34 சதவீதம் குறைந்து 96.9 லட்சம் டன்னாக இருந்தது என அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
உள்நாட்டில், கண்ட்லா, மும்பை, ஜேஎன்பிடி, மர்மகோவா, புதிய மங்களூர், கொச்சின், சென்னை, எண்ணூர், வ.உ. சிதம்பரனார், விசாகப்பட்டினம், பாரதீப் மற்றும் கொல்கத்தா (ஹால்டியா உள்பட) ஆகிய 12 துறைமுகங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்தியாவின் ஒட்டுமொத்த சரக்கு போக்குவரத்தில் இத்துறைமுகங்களின் பங்களிப்பு 61 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com