முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

பங்குச் சந்தை சென்செக்ஸ் 61 புள்ளிகள் சரிவு

மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ், திங்கள்கிழமை 61 புள்ளிகள் சரிந்து 35,000-க்கும் குறைவான புள்ளிகளுடன் நிறைவடைந்தது.

News image
Updated On :6 நவம்பர் 2018, 12:49 am IST

மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ், திங்கள்கிழமை 61 புள்ளிகள் சரிந்து 35,000-க்கும் குறைவான புள்ளிகளுடன் நிறைவடைந்தது.
ஆசியச் சந்தையில் நிலவி வரும் மந்த நிலை, அமெரிக்க - சீன வர்த்தகப் போர் விவகாரத்தில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மை காரணமாக முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டதால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்ததும், பங்குச் சந்தையை மந்தமடையச் செய்ததாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
திங்கள்கிழமை தொடங்கிய மும்பைப் பங்குச் சந்தையில் பங்குகளை விற்பனை செய்வதில் முதலீட்டாளர்கள் மும்முரம் காட்டியதால், மிகவும் குறைந்தபட்சமாக 34,811 புள்ளிகள் வரை தாழ்ந்த சென்செக்ஸ், இறுதியில் 34,950 புள்ளிகளில் நிலைத்தது.
இதன் மூலம், மும்பை சென்செக்ஸ் திங்கள்கிழமை 61 புள்ளிகள் (0.17%) சரிந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.