
அந்நிய செலாவணி சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 26 காசுகள் உயர்வடைந்தது.
அண்மைக் காலமாக ரூபாய் மதிப்பு சரிந்து வந்த நிலையில், கடந்த ஐந்து தினங்களாக தொடர்ச்சியாக அதன் மதிப்பு ஏற்றம் கண்டு வருகிறது. இதற்கு, டாலர் வரத்து ஸ்திரத்தன்மை அடைந்ததே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
அதற்கு உதாரணமாக, மூலதன சந்தையில் திங்கள்கிழமை அந்நிய முதலீட்டாளர்கள் நிகர அளவில் ரூ.1,100 கோடியை முதலீடு செய்துள்ளனர்.
அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 26 காசுகள் உயர்ந்து 71.67-ஆனது. கடந்த நவம்பர் 13-ஆம் தேதியிலிருந்து ரூபாயின் மதிப்பு நிலைத்தன்மை பெற்று வருகிறது. அந்த வகையில், ஐந்து தினங்களில் மட்டும் ரூபாயின் மதிப்பு 1.68 சதவீதம் அளவுக்கு ஏற்றத்தைக் கண்டுள்ளது. இது, கடந்த பத்து வாரங்களில் காணப்படாத அதிகபட்ச அளவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






