ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அமெரிக்க அரசின் நடவடிக்கைக்கு எதிராக டிக்டாக் நிறுவனம் வழக்கு

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட டிக்டாக் நிறுவனம் அமெரிக்காவில் செயல்படுவதற்கு தடைகோரும் அதிபர் டொனால்ர் ட்ரம்ப்பின் ஆணைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :25 ஆகஸ்ட் 2020, 11:06 am

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட டிக்டாக் நிறுவனம் அமெரிக்காவில் செயல்படுவதற்கு தடைகோரும் அதிபர் டொனால்ர் ட்ரம்ப்பின் ஆணைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது.

அமெரிக்க குடிமக்களின் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்புக் குறைபாட்டை காரணமாகக் கூறி டிக்டாக் நிறுவனத்திற்கு அமெரிக்காவில் செயல்பட அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. தொடர்ந்து டிக்டாக் நிறுவனத்தை செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் அமெரிக்க நிறுவனத்திற்கு ஒப்படைப்பது குறித்து முடிவெடுக்குமாறும் ட்ரம்ப் அறிவித்தார்.

இதற்கிடையே, டிக்டாக் செயலியின் அமெரிக்க செயல்பாட்டை கையகப்படுத்துவது குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள்  பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் டிக்டாக் நிறுவனம் அமெரிக்க பரிவர்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

தொடர்ந்து டிக்டாக் நிறுவனம் அதிபர் ட்ரம்ப் மற்றும் வர்த்தக அமைச்சருக்கு எதிராக கலிபோர்னியாவின் மத்திய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதுகுறித்து “எங்கள் உரிமைகள் மற்றும் ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை” என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிக்டாக் நிறுவனத்தின் வழக்குக்கு வெள்ளை மாளிகை இதுவரை பதிலளிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.