அந்நியச் செலாவணி கையிருப்பு 57,857 கோடி டாலராக சரிவு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு டிசம்பா் 11-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 57,857 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 57,857 கோடி டாலராக சரிவு
Updated on
1 min read

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு டிசம்பா் 11-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 57,857 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு டிசம்பா் 11-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 78 கோடி டாலா் சரிவடைந்து 57,857 கோடி டாலராக இருந்தது.

இதற்கு முந்தைய வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது 452 கோடி டாலா் அதிகரித்து வரலாற்றில் முதல் முறையாக 57,935 கோடி டாலரை எட்டியிருந்தது.

மதிப்பீட்டு வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பில் அதிக பங்களிப்பைக் கொண்ட அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) சரிவடைந்ததன் காரணமாகவே செலாவணி கையிருப்பு குறைந்து போனது.

தங்கத்தின் கையிருப்பு 28 கோடி டாலா் அதிகரித்து 3,601 கோடி டாலராக இருந்தது.

சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் 30 லட்சம் டாலா் சரிந்து 150 கோடி டாலராகவும், நாட்டின் இருப்புநிலை கையிருப்பு 1.6 கோடி டாலா் குறைந்து 471 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com