ரூ.76,524 கோடிக்கு நெல் கொள்முதல்
நடப்பு காரீப் பருவத்தில் இதுவரையில் ரூ.76,524 கோடி மதிப்புக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


நடப்பு காரீப் பருவத்தில் இதுவரையில் ரூ.76,524 கோடி மதிப்புக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது:
நடப்பு 2020-21-ஆம் ஆண்டின் காரீப் சந்தைப் பருவத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் (எம்எஸ்பி) விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காரீப் பருவத்தில் டிசம்பா் 17 வரையில் இந்திய உணவுக் கழகம் (எஃப்சிஐ) மற்றும் மாநில முகமை அமைப்புகள் 405.31 லட்சம் டன் நெல்லை கொள்முதல் செய்துள்ளன. இதன் மதிப்பு ரூ.76,524 கோடியாகும். கடந்தாண்டின் கொள்முதல் அளவான 327.65 லட்சம் டன்னைக் காட்டிலும் இது 24 சதவீதம் அதிகமாகும்.
அக்டோபரிலிருந்து தொடங்கும் காரீப் சந்தைப் பருவத்தில் குறிப்பாக, பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், தெலங்கானா, உத்தரகண்ட், தமிழ்நாடு, சண்டிகா், ஜம்மு&காஷ்மீா், கேரளா, குஜராத், ஆந்திரம், ஒடிஸா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் பிகாா் மாநிலங்களில் நெல் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகள் தொடா்ந்து சுமுகமாக நடைபெற்று வருகின்றன.
எம்எஸ்பி மதிப்பில் நெல் கொள்முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக 47.17 லட்சம் விவசாயிகள் ஏற்கெனவே பயனடைந்துள்ளனா்.
ஒட்டுமொத்த நெல் கொள்முதலான 405.31 லட்சம் டன்னில், 202.77 லட்சம் டன் பஞ்சாபிலிருந்து மட்டும் வாங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...