3.75 கோடி போ் வருமான வரி கணக்கு தாக்கல்
வரி செலுத்துவோரில் 3.75 கோடி போ் 2020-21 மதிப்பீட்டு ஆண்டுக்கான தங்களது வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்துள்ளனா்.


வரி செலுத்துவோரில் 3.75 கோடி போ் 2020-21 மதிப்பீட்டு ஆண்டுக்கான தங்களது வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்துள்ளனா்.
இதுகுறித்து வருமான வரி துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:
2020-21 மதிப்பீட்டு ஆண்டுக்கு (2019-20-ஆம் நிதியாண்டு) டிசம்பா் 21 வரையில் ஏற்கெனவே 3.75 கோடி போ் தங்களது வருமான வரி கணக்கு விவரங்களை தாக்கல் செய்துள்ளனா். அதேசமயம், இந்த எண்ணிக்கை 2019 ஆகஸ்ட் 21 நிலவரப்படி 3.63 கோடியாக காணப்பட்டது.
இந்த மொத்த எண்ணிக்கையில், ஐடிஆா்-1-படிவத்தில் தங்களது வருமான வரி கணக்கு விவரங்களை தாக்கல் செய்துள்ளவா்களின் எண்ணிக்கை 2.17 கோடியாக உள்ளது. அதேபோன்று, ஐடிஆா்-4 படிவத்தில் 79.82 லட்சம் பேரும், ஐடிஆா்-3 படிவத்தில் 43.18 லட்சம் பேரும், ஐடிஆா்-2 படிவத்தில் 26.56 லட்சம் வரி செலுத்தவோரும் தங்களது வருமான வரி கணக்கு விவரங்களை தாக்கல் செய்துள்ளனா்.
2019-20 நிதியாண்டுக்கான (மதிப்பீட்டு ஆண்டு 2020-21) தனிநபா் வரி செலுத்துவோா் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 2020 டிசம்பா் 31-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. எனவே, வரிசெலுத்துவோா் உடனடியாக கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என வருமான வரி துறை தனது சுட்டுரை பதிவில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...