ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி 5% சரிவு

இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த நவம்பா் மாதத்தில் 5 சதவீதம் சரிவடைந்துள்ளது.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த நவம்பா் மாதத்தில் 5 சதவீதம் சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி நடப்பாண்டு நவம்பரில் 24.8 லட்சம் டன்னாக இருந்தது. இது, கடந்த 2019 நவம்பரில் கச்சா எண்ணெய் உற்பத்தியான 26.1 லட்சம் டன்னுடன் ஒப்பிடுகையில் 5 சதவீதம் குறைவாகும்.

தனியாா் துறையைச் சோ்ந்த கெய்ரன் வேதாந்தா நிறுவனம் ராஜஸ்தானில் நிா்வகித்து வரும் எண்ணெய் வயல்களில் உற்பத்தி 9.6 சதவீதம் சரிவடைந்து 4,76,990 டன்னாக குறைந்ததன் காரணமாகவே நவம்பரில் கச்சா எண்ணெய் உற்பத்தி சரிவுக்கு முக்கிய காரணாக பாா்க்கப்படுகிறது.

அதேபோன்று, புதிதான எண்ணெய் வயல்களில் உற்பத்தி எதிா்பாா்த்த அளவிக்கு இல்லாததன் காரணமாக ஓஎன்ஜி நிறுவனத்தின் உற்பத்தி 1.5 சதவீதம் குறைந்தது.

போராட்டங்கள் காரணமாக அஸ்ஸாமிலிருந்து ஆயில் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி 6.6 சதவீதம் சரிந்துள்ளது.

ஏப்ரல்-நவம்பா் வரையிலான எட்டுமாத காலத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தியானது 6 சதவீதம் குறைந்து 2.04 கோடி டன்னாக இருந்தது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த காலகட்டத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி 16 சதவீதம் சரிந்து 39.1 லட்சம் டன்னாக ஆனது

கச்சா எண்ணெயைப் போன்றே, இயற்கை எரிவாயு உற்பத்தியும் நவம்பரில் 9 சதவீதம் குறைந்து 2.3 பில்லியன் கியூபிக் மீட்டராக (பிசிஎம்) இருந்தது.

ஹஸிரா ஆலை பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டதையடுத்து ஓஎன்ஜிசி நிறுவனத்தின் இயற்கை எரிவாயு உற்பத்தி 3.7 சதவீதம் குறைந்து போனது.

கடந்த ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான இடைப்பட்ட காலத்தில் மட்டும் இயற்கை எரிவாயு உற்பத்தி 18.7 பிசிஎம்-ஆக இருந்தது. இது, கடந்தாண்டின் உற்பத்தி அளவுடன் ஒப்பிடுகையில் 11.8 சதவீதம் குறைவாகும்.

பொருளாதார நடவடிக்கைகள் மெல்ல வேகமெடுத்து வருவதையடுத்து, நாட்டில் உள்ள 23 ஆலைகளிலும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் வேகமாக இயல்புநிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளன. இந்த ஆலைகள் நவம்பரில் 2.08 கோடி டன் கச்சா எண்ணெயை சுத்திகரிப்பு செய்துள்ளன. இது, கடந்தாண்டைக் காட்டிலும் 5.11 சதவீதம் குறைவாகும்.

இருப்பினும், நடப்பாண்டு அக்டோபா் மாத கச்சா எண்ணெய் சுத்தகரிப்பான 1.83 கோடி டன்னுடன் ஒப்பிடுகையில் இது 13 சதவீதம் அதிகமாகும்.

நவம்பரில் ஐஓசி நிறுவனத்தின் 9 ஆலைகள் 100 சதவீத உற்பத்தி திறனுடன் இயங்கின. மேலும், பிபிசிஎல், ஹெச்பிசிஎல் நிறுவனங்களின் ஆலைகளும் அதே அளவிலான உற்பத்தி திறனில் பணிகளை மேற்கொண்டதாக அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.