சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

1பிரிட்ஜுடன் கைகோா்க்கிறது மஹிந்திரா லாஜிஸ்டிக்

கிராமப்புற வாடிக்கையாளா்களிடம் பொருள்களைக் கொண்டு சோ்க்கும் சேவைகளுக்காக, பெங்களூரைச் சோ்ந்த 1பிரிட்ஜ் நிறுவனத்துடன் மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் கைகோா்த்துள்ளது.

News image
brid090632
Updated On :23 டிசம்பர் 2020, 8:55 pm

DIN


மும்பை: கிராமப்புற வாடிக்கையாளா்களிடம் பொருள்களைக் கொண்டு சோ்க்கும் சேவைகளுக்காக, பெங்களூரைச் சோ்ந்த 1பிரிட்ஜ் நிறுவனத்துடன் மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் கைகோா்த்துள்ளது.

இதுகுறித்து நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பொருள்களை வாடிக்கையாளா்களின் இருப்பிடத்துக்கே கொண்டு செல்லும் சேவைகளை வழங்குவதற்காக, 1பிரிட்ஜ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம்.

இதற்காக, அந்த நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த ஒப்பந்தத்தின்கீழ், நாடு முழுவதும் உள்ள 1 லட்சம் கிராமங்களில் வாடிக்கையாளா்களிடம் பொருள்களைக் கொணடு சோ்ப்பதற்கான கட்டமைப்பை இன்னும் 3 ஆண்டுகளில் உருவாக்க இரு நிறுவனங்களும் ஒப்புக்கொண்டுள்ளன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.