இளைஞர்களைக் கவரக்கூடிய பல்வேறு நவீன அம்சங்களுடன் கொண்ட ரிவர்சாங் மோட்டிவ் பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் வெளியாகியுள்ளது.
இதன் வடிவமைப்பு பார்ப்போரை கவரும் வகையில் உள்ளது. சிலிகான் பட்டையுடன் மணிக்கட்டில் நன்கு சீராக பொருந்தியிருக்கும். அனைத்து வடிவங்களிலும், வெவ்வேறு அளவுகளிலும் பிரகாசமான வண்ணங்களிலும் இருப்பதால் இளைஞர்களை கவருகிறது.
இதய துடிப்பு கண்காணிப்பு, உடற்பயிற்சி குறித்த தகவல்கள் அனைத்தும் மிகவும் துல்லியமாக அளவிடப்படுகின்றன. மற்ற ஸ்மார்ட் வாட்ச்சுகளை ஒப்பிடுகையில், நீண்ட பேட்டரி ஆயுள் கொண்டுள்ளது. அதிகபட்சமாக 6 நாட்கள் பயன்படுத்தலாம். இளைஞர்களை திருப்திப்படுத்தக்கூடிய பல அம்சங்கள் இதில் உள்ளதாக பரிந்துரைக்கிறார் கேட்ஜெட் ஆய்வாளர்கள்.
இதன் விலை ரூ.3,499. நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளமான riversongindia.com -இல் கிடைக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.