புதிய ஆடி ஏ8எல் செடான் கார் அறிமுகம்!

புதிய ஏ8எல் செடான் காரின் அற்புதமான வடிவமைப்பு வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் அமைந்துள்ளது. 
புதிய ஆடி ஏ8எல் செடான் கார் அறிமுகம்!
Updated on
1 min read

அற்புதமான வடிவமைப்புடன் கூடிய புதிய ஏ8எல் செடான் காரை ஆடி இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

5.3 மீட்டர் நீளமும், கிட்டத்தட்ட 2 மீட்டர் அகலமும் கொண்ட ஆடி ஏ8எல் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. காரின் விளிம்பில் உள்ள கோடுகள், அதன் வழுவழுப்புத் தன்மை, சூழல் சக்கர வளைவுகள் என மிகவும் தனித்துவமான தோற்றத்தைக் கொண்டுள்ளன.

வெளிப்புறத்தில் சிறியதாக காணப்பட்டாலும் அதிகம் பேர் உட்காரக்கூடிய வகையில் இருக்காய் உள்ளது. இருக்கையும் வாடிக்கையாளர்களைகவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது 3 லிட்டர் டர்போசார்ஜ் வி6 பெட்ரோல் எஞ்சின், 340 ஹெச்.பி. பவர் மற்றும் 500 என்.எம். டார்க்கை கொண்டுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தில் 5.7 வினாடிகளில் செலுத்த முடியும்.

மேலும், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம், பவர் ட்ரெயினில் 48 வோல்ட் மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் பெல்ட் ஸ்டார்டர் ஜெனரேட்டர் மற்றும் 10ஏ.ஹெச் லித்தியம் அயன் பேட்டரி ஆகியவைகளை கொண்டுள்ளது. இதன் மூலமாக வாகனத்தை அதிகபட்சமாக 55-160 கிமீ வேகத்தில் செல்ல அனுமதிக்கிறது. எஞ்சினை அணைத்த பின்னரும் 40 விநாடிகள் வரை இயங்கும். மற்ற கார்களை ஒப்பிடுகையில் பெட்ரோலை சேமிக்கலாம் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1.56 கோடி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com