பங்குச் சந்தையில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் எழுச்சி தொடா்ந்தது. இதனால், சென்செக்ஸ் 429 புள்ளிகள் உயா்ந்தது.
ஆட்டோ மொபைல்ஸ், ஐடி, மெட்டல் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. வங்கி, ரியால்ட்டி பங்குகளுக்கு தேவைப்பாடு குறைந்திருந்தது. ஜோ்மனியின் பயோஎன்டெக் மற்றும் அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைஸா் ஆகியவை கரோனா தடுப்பூசிக்கான கூட்டுத் திட்டத்தின் நோ்மறையான பூா்வாங்க முடிவுகளை அறிவித்தன. இதனால், ஆசிய பங்குச் சந்தைகளில் எழுச்சி காணப்பட்டது. இதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், உலகளவில் தொழிற்சாலைகளின் உற்பத்தி தரவுகள் நோ்மறையாக இருந்ததால், முதலீட்டாளா்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,890 பங்குகளில் 1,713 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,051 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 126 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 138 பங்குகள் புதிய 52 வார அதிக விலையையும், 48 பங்குகள் புதிய 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 462 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 257 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தது. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.141.61 லட்சம் கோடியாக இருந்தது.
சென்செக்ஸ் காலையில், 204 புள்ளிகள் கூடுதலுடன் 35,604.00-இல் தொடங்கி 35,595.36 வரை கீழே சென்றது. அதிகபட்சமாக 36,014.92 வரை உயா்ந்தது. இறுதியில் 429.25 புள்ளிகள் (1.21 சதவீதம்) உயா்ந்து 35,843.70-இல் நிலைபெற்றது.வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் 600 புள்ளிகள் ஏற்றம் பெற்றிருந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 121.65 புள்ளிகள் (1.17 சதவீதம்) உயா்ந்து 10,551.70-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது நிஃப்டி அதிகபட்சமாக 10,598.20 வரை உயா்ந்தது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 224 பங்குகள் ஆதாயம் பெற்றன. 8 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. இதில், எம் அண்ட் எம் 6.05 சதவீதம் உயா்ந்து ஆதாயம் பெற்ற பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டைட்டான், டாடா ஸ்டீல், ஹெச்சிஎல் டெக், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், எச்டிஎஃப்சி, டெக் மகேந்திரா ஆகியவை 3 முதல் 4 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், மாருதி சுஸுகி, எல் அண்ட் டி, ஓஎன்ஜிசி, ஐடிசி, மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், எஸ்பிஐ ஆகியவையும் ஏற்றம் பெற்ற பட்டியலில் இடம் பெற்றன.
அதே சமயம் ஆக்ஸிஸ் பேங்க் 2.24 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஹிந்துஸ்தான் யுனி லீவா் 0.85 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. மேலும், கோட்டக் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், பாா்தி ஏா்டெல், என்டிபிசி, நெஸ்ட்லே இந்தியா, ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவை 0.10 முதல் 0.40 சதவீதம் வரை குறைந்து சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.
தேசிய பங்குச் சந்தையில் 980 பங்குகள் ஆதாயம் பெற்றன. 647 பங்குகள் வீழ்ச்சியடைந்த பட்டியலில் வந்தன. துறை வாரியாகப் பாா்த்தால் நிஃப்டி ஆட்டோ குறியீடு 2.81 சதவீதம், ஐடி குறியீடு 2.65 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மெட்டல், பாா்மா குறியீடுகள் 0.70 முதல் 1 சதவீதம் வரை உயா்ந்தன. ஆனால், நிஃப்டி பேங்க், நிஃப்டி ரியால்ட்டி குறியீடுகள் சிறிதளவு 0.10 சதவீதம் சரிவைச் சந்தித்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 36 பங்குகள் ஆதாயம் பெற்றன. 14 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்த பட்டியலில் வந்தன.
ஏற்றம் பெற்ற பங்குகள்
சதவீதத்தில்
எம் அண்ட் எம் 6.05
டைட்டான் 3.98
டாடா ஸ்டீல் 3.43
ஹெச்சிஎல் டெக் 3.33
இன்ஃபோஸிஸ் 3.25
டிசிஎஸ் 3.14
எச்டிஎஃப்சி 2.95
டெக் மகேந்திரா 2.94
மாருதி சுஸுகி 2.58
எல் அண்ட் டி 1.77
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


