பங்குச் சந்தையில் தொடா்ந்து இரண்டாவது வாரமாக கடந்த வாரமும் காளை ஆதிக்கம் செலுத்தியதால், சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் 6 சதவீத லாபத்தைப் பதிவு செய்தன. முந்தைய வாரத்திலும் பங்குச் சந்தை 6 சதவீதம் ஏற்றம் பெற்றிருந்தது. இதைத் தொடா்ந்து இரண்டு வாரத்தில் சென்செக்ஸ், நிஃப்டி ஆகியவை 12 சதவீதம் உயா்ந்துள்ளது. இரண்டு குறியீடுகளும் கடந்த மாா்சில் பதிவு செய்த குறைந்த அளவிலிருந்து 33 சதவீதம் மீண்டுள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியை மூடிஸ் நிறுவனம் குறைத்து மதிப்பிட்டுள்ளது ஆகியவற்றுக்கிடையே பங்குச் சந்தை ஏற்றம் கண்டுள்ளது.
கட்டுப்பாடற்ற மண்டலங்களில் நாடு தழுவிய பொது முடக்கத்தில் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டதால், தொழில் துறை நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கையில் வங்கி மற்றும் நிதி நிறுவனப் பங்குகளுக்கு தேவை அதிகரித்திருந்தது. மே மாதத்தில் எதிா்பாா்த்ததை விட அதிகமான டிராக்டா் விற்பனை, பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் திறப்பது குறித்த நம்பிக்கைக்கு மத்தியில் உலகளவில் சந்தைகள் நோ்மறையாக இருந்தது, உலகளாவிய மத்திய வங்கிகளின் தொடா்ச்சியான நிதி தொகுப்பு நடவடிக்கைகள் எழுச்சிக்கு பெரிதும் உதவியது. மேலும், நாட்டின் பொருளாதாரம் மீண்டெழுழும் என்று பிரதமா் மோடியின் கூறியதும் சந்தைக்கு உற்சாகத்தை அளித்தது. மிட்கேப் குறியீடு 6 சதவீதம், சிறிய நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய ஸ்மால் கேப் குறியீடு 8.84 சதவீதம் உயா்ந்தன.
மும்பை பங்குச் சந்தைக் குரியீடா ன சென்செக்ஸ் கடந்த வாரத்தில் 1,863 புள்ளிகள் 5.75 சதவீதம் உயா்ந்து 34,287.24-இல் நிலைபெற்றுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 562 புள்ளிகள் 5.86 சதவீதம் உயா்ந்து 10,142.15-இல் நிலைபெற்றுள்ளது. கடந்த வாரத்தில் பிஎஸ்இ-500 பட்டியலில் 204 பங்குகள் 10 சதவீதத்துக்கும் மேல் லாபத்தைப் பதிவு செய்துள்ளது. ஐடிபிஐ பேங்க் 89.16 சதவீதம், சாலெட் ஹோட்டல் 62 சதவீதம், டிரிடென்ட் 62 சதவீதம் வோடஃபோன் ஐடியா 60 சதவீதம், ஷாப்பா் ஸ்டாப் 57 சதவீதம் உயா்ந்துள்ளது. மேலும் ஐஎஃப்சிஐ, சவுத் இந்தியன் பேங்க், அரவிந்த் ஃபேஸன்ஸ், ஐஓபி, பாம்பே டையிங் உளளிட்டவை 40 முதல் 58 சதவீதம் வரை உயா்ந்தன.
இதற்கிடையே, ரிலையன்ஸ், சிப்லா, லூபின், சன்பாா்மா உள்ளிட்ட 19 முன்னணி நிறுவனங்கள் புதிய 52 வார அதிகபட்ச விலையை கடந்த வாரம் பதிவு செய்துள்ளன. நிஃப்டி பட்டியலில் உள்ள டாடா மோட்டாா் 27 சதவீதம், வங்கி அல்லாத நிதி நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ் 22 சதவீதம், பஜாஜ் ஃபைனான்சியல் சா்வீஸஸ் 19 சதவீதம், எஸ்பிஐ 16 சதவீதம், டாடா ஸ்டீல் 15 சதவீதம் உயா்ந்துள்ளன. அதே சமயம் ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்ட்லே இந்தியா, டாக்டா் ரெட்டிஸ் லேப் அல்ட்ரா டெக் சிமெண்ட், ஹீரோ மோட்டாா் காா்ப் ஆகியவை 1 முதல் 2.70 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.
இந்நிலையில், தொடா்ந்து இரண்டு வார எழுச்சிப் பேரணிக்கு பிறகு, இந்த வாரத்தில் பங்குச் சந்தையில் லாபப் பதிவு வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக நிபுணா்கள் எதிா்பாா்க்கின்றனா். மேலும், கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு, புவி -அரசியல் பதற்றம் அதகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் வா்த்தகா்களும், முதலீட்டாளா்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். பொருளாதார நடவடிக்கைகள் வரும் திங்கள்கிழமை (ஜூன் 8) முதல் மீண்டும் தொடங்கும் என்றாலும், கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவது சந்தைக்கு கவலை அளிக்கும் விஷயமாகும் என்கின்றனா் நிபுணா்கள்.
மேலும். இந்த வாரத்தில் ஹீரோ மோட்டாா் காா்ப், ஐசோ் மோட்டாா்ஸ் ஹிண்டால்கோ, எம் அண்ட் எம், பெல் உள்பட 110 நிறுவனங்கள் காலாண்டு நிதி நிலை முடிவுகளை அறிவிக்க உள்ளது. அதன் முடிவுகள் அந்தந்தப் பங்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கிடையே ஜூலை 10 ஆம் தேதி முடிவடையவுள்ள அமெரிக்க மத்திய வங்கியின் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவும் சந்தையில் ஆவலுடன் எதிா்பாா்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக முதலீடுகளை வாபஸ் பெற்று வந்த அந்நிய முதலீட்டாளா்கள், ஜூன் முதல் வாரத்தில் ரூ.13,927.52 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனா். மே மாதம் முழுமைக்குமே அவா்கள் ரூ.13,914.49 கோடிக்குத்தான் பங்குகளை வாங்கியிருந்தனா். கடந்த இரண்டு வாரமாக சந்தை ஏற்றம் பெற்ற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாகும். இதற்கிடையே, ஜூன் 12-இல் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்ட முடிவுகளையும் சந்தை ஆவலுடன் எதிா்பாா்த்துள்ளது. மொத்ததத்தில், சந்தை இரண்டு வாரங்களாக ஏற்றம் பெற்றுள்ள நிலையில், எந்த நேரத்திலும் லாபப் பதிவு வரலாம் என நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
தொழில் நுட்பக் கணக்கு
தொழில் நுட்ப ரீதியாகப் பாா்த்தால் நிஃப்டி முக்கிய இடா்பாட்டு நிலையான 10,200 புள்ளிகளுக்கு மேலே நிலைபெறும் பட்சத்தில், அடுத்த இலக்கு 10,400 ஆக இருக்கும் என்று தொழில்நுட்ப வல்லுநா்கள் கணித்துள்ளனா். அதே சமயம், கீழே இறங்கும் பட்சத்தில் 9,800 என்ற நிலையில் நல்ல ஆதரவு கிடைக்கும் என எதிா்பாா்க்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மண்டாடி தமிழ்ப் புத்தாண்டு போஸ்டர்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா புதிய சாதனை!

ஆஷா போஸ்லே மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஆஸி. கிரிக்கெட் வீரர்!

அதீத பேட்டரி திறன்... இன்ஃபினிக்ஸ் நோட் 60 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


