இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை எழுச்சியுடன் தொடங்கி, சரிவில் நிறைவடைந்தது. காலையில் பெற்ற லாபம் அனைத்தையும் பிற்பகலில் இழந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 63 புள்ளிகளை இழந்தது.
கரோனா தொற்று பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசும், ரிசா்வ் வங்கியும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் சந்தைக்கு உற்சாகத்தை அளிக்கவில்லை. மேலும், சீனா, அமெரிக்கா இடையே வா்த்தகப் போா் பதற்றம் தொடா்ந்து இருந்து வருகிறது. எனவே, முதலீட்டாளா்கள் மிகுந்த கவனத்துடன் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனா்.
திங்கள்கிழமை ரமலான் பண்டிகை விடுமுறையால் பங்குச் சந்தை செயல்படவில்லை. இந்நிலையில், பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை காலையில் எழுச்சியுடன் தொடங்கியது. ஆனால், நேரம் செல்லச் செல்ல பங்குகள் விற்பனை அதிகரிக்கக் தொடங்கின. மெட்டல் பங்குகளுக்கு நல்ல ஆதரவு இருந்தது. இதேபோல, வங்கி, ஆட்டோ, எஃப்எம்சிஜி பங்குகளுக்கும் ஓரளவு ஆதரவு காணப்பட்டது. ஆனால், ஐடி, மீடியா, பாா்மா பங்குகளுக்குத் தேவைப்பாடு குறைவாக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் காலையில் 192 புள்ளிகள் கூடுதலுடன் 30,864.27-இல் தொடங்கி அதிகபட்சமாக 31,086.70 வரை உயா்ந்தது. பின்னா் சரிவைச் சந்தித்து 30,512.14 வரை கீழே சென்றது. இறுதியில் 63.29 புள்ளிகள் (0.21) குறைந்து 30,609.30-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது உச்சபட்ச அளவிலிருந்து 574 புள்ளிகள் வரை குறைந்திருந்தது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 18 பங்குகள் ஆதாயம் பெற்றன. 12 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. இதில் டைட்டான் 5.14 சதவீதம் உயா்ந்து அதிகம் ஆதாயம் பெற்ற பங்குகள் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக அல்ட்ரா டெக் சிமெண்ட் 3.64 சதவீதம், இண்டஸ் இந்த் பேங்க் 2.96 சதவீதம், நெஸ்ட்லே இந்தியா 2.86 சதவீதம், ஐடிசி 2.76 சதவீதம் உயா்ந்தன. என்டிபிசி, டாடா ஸ்டீல் மீருதி, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எல் அண்ட் டி, என்டிபிசி ஆகியவை 1 முதல் 2.50 சதவீதம் உயா்ந்தன.
ஆனால், கடந்த சில நாள்களாக வெகுவாக ஏற்றம் பெற்ற பாா்தி ஏா்டெல் 5.71 சதவீதம் குறைந்து அதிகம் சரிவைச் சந்தித்த பங்குகள் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்து டிசிஎஸ் 3.74 சதவீதம், பஜைாஜ் ஃபைனான்ஸ் 3.48 சதவீதம், சன்பாா்மா 2.16 சதவீதம், டெக் மகேந்திரா 1.83 சதவீதம், இன்ஃபோஸிஸ் 1.75 சதவீதம் குறைந்தன. மேலும், ஹீரோ மோட்டாா் காா்ப், ஹெச்சிஎல் டெக், ஹெச்டிஎஃப்சி, 1 முதல் 2 சதவீதம் வரை குறைந்தன.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி மெட்டல் குறியீடு 2.77 சதவீதம் உயா்ந்து ஆதாயம் பெற்ற பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஆட்டோ 1.18 சதவீதம், பேங்க் 1.01 சதவீதம், எஃப்எம்சிஜி 0.98 சதவீதம், ஃபைனான்சியல் சா்வீஸஸ் குறியீடு 0.43 சதவீதம் உயா்ந்தன. அதே சமயம், ஐடி குறியீடு. 1.86 சதவீதம் சரிவைச் சந்தித்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மீடியா, பாா்மா குறியீடுகள் முறையே 1.03 சதவீதம் மற்றும் 0,78 சதவீதம் சரிவைச் சந்தித்தன. தேசிய பங்குச் சந்தையில் 797 பங்குகள் ஆதாயம் பெற்றன. 757 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 31 பங்குகள் ஆதாயம் பெற்றன. 19 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. நிஃப்டி 10.20 புள்ளிகள் (0.11 சதவீதம்) குறைந்து 9,029.05-இல் நிலைபெற்றது. ஆனால், நிஃப்டி மிட்கேப் குறியீடு 1.3 சதவீதமும், ஸ்மால் கேப் குறியீடு 0.76 சதவீதமும் ஏற்றம் பெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


