கரோனா வைரஸ் எதிரொலி: சாம்சங் உற்பத்தி ஆலை இடமாற்றம்

கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சாம்சங் ஸ்மார்ட்போன் உற்பத்தி ஆலை ஒன்று தற்காலிகமாக வியட்நாமிற்கு மாற்றப்பட்டுள்ளது. 
கரோனா வைரஸ் எதிரொலி: சாம்சங் உற்பத்தி ஆலை இடமாற்றம்

கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சாம்சங் ஸ்மார்ட்போன் உற்பத்தி ஆலை ஒன்று தற்காலிகமாக வியட்நாமிற்கு மாற்றப்பட்டுள்ளது. 

ஸ்மார்ட்போன் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் சாம்சங் நிறுவனம், தனது 'சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் கோ.' நிறுவனத்தை தற்காலிகமாக வியட்நாமிற்கு  மாற்றி அறிவித்துள்ளது.

முன்னதாக தென் கொரியாவில் குமி(gumi) நகரில் உள்ள உற்பத்தித் தொழிற்சாலையில் பணியாற்றிய 6 ஊழியர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக தகவல் வந்ததையடுத்து, அந்த ஆலை மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து வியட்நாமில் தற்காலிகமாக ஒரு ஆலை உருவாக்கப்பட்டுள்ளது. 

சாம்சங்கின் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள், கேலக்ஸி எஸ் 20 மற்றும் கேலக்ஸி நோட் 10 ஆகியவை முழுமையாக குமி நகரில் உள்ள நிறுவன ஆலையில் தயாரிக்கப்பட்டன. தொடர்ந்து, வியட்நாமில் உள்ள தளத்தில் 2,00,000 ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக நிறுவனத் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதேபோன்று யோங்கினில் உள்ள சாம்சங் தொழிற்சாலையிலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. எனினும் அந்த தொழிற்சாலை மூடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com