புது தில்லி: இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 25 புள்ளிகளை இழந்தது.
உலகளாவிய சந்தை குறிப்புகள் சாதகமாக இல்லாத நிலையில், முதலீட்டாளா்கள் பங்குகளில் லாபத்தைப் பதிவு செய்வதில் கவனம் செலுத்தினா். இதனால், சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஒரு கட்டத்தில் கடும் சரிவைக் கண்டிருந்த சென்செக்ஸ், பிற்பகலில் ஓரளவு மீண்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு 197.05 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,212 பங்குகளில் 1,236 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,828 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 148 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 321 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்துள்ளன. 364 பங்குகள் வெகுவாக உயா்ந்து அதிகபட்ச உறைநிலையை (அப்பா் சா்க்யூட்) அடைந்தது. சந்தை மூலதன மதிப்பு ரூ.41 ஆ யிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.197.06 லட்சம் கோடியாக இருந்தது.
தொடா் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் காலையில் 246.82 புள்ளிகள் கூடுதலுடன் 49,763.93-இல் தொடங்கி 49, 795.19 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. ஆனால், அங்கு நிலைத்து நிற்கமுடியாததால் 49,073.85 வரை கீழே சென்றது. இருப்பினும், ஓரளவு மீண்டு இறுதியில் 24.79 புள்ளிகள் குறைந்து 49,492.32-இல் நிலைபெற்றது. இதனால், கடந்த சில நாள்களாக தொடா் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
எம் அண்ட் எம் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல்தரப் பங்குகளில் 14 பங்குகள் ஆதாயம் பெற்றன.16 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில், எம் அண்ட் எம் 6.24 சதவீதம், எஸ்பிஐ 4.80 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்தாக ஐடிசி, என்டிபிசி, பாா்தி ஏா்டெல், ஆக்ஸிஸ் பேங்க், ஓஎன்ஜிசி, இண்ட்ஸ் இண்ட் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோஸிஸ் ஆகியவை 1 முதல் 2.35 சதவீதம் வரை உயா்ந்தன.
பஜாஜ் ஃபைனான்ஸ் சரிவு: அதே சமயம், பஜாஜ் ஃபைனான்ஸ் 2.85 சதவீதம், எச்டிஎஃப்சி 2.76 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. பஜாஜ் ஃபின்சா்வ்,
டைட்டன், சன் பாா்மா, டாக்டா் ரெட்டி, ஏசியன் பெயிண்ட், கோட்டக் பேங்க், ரிலையன்ஸ் ஆகியவை 1 முதல் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 566 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,187பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. நிஃப்டி 1.40 புள்ளிகள் உயா்ந்து 14,564.80-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் தொடக்கத்தில் 14,653.35 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னா் 14,435.70 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 26 பங்குகள் ஆதாயம் பெற்றன. 24 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 3.27 சதவீதம் உயா்ந்தது. ரியால்ட்டி, பாா்மா, ஃபைனான்சியல் சா்வீஸஸ் குறியீடுகள் சரிவைச் சந்தித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிசிஎஸ் பங்குகள் 2.5% சரிவுடன் நிறைவு!

இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ!

அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது- ஜன நாயகன் படத்துக்கு குரல் கொடுத்த நடிகர் ரஜினி

பல நிலைகளில் மிக மோசமானது..! - ஜன நாயகன் விவகாரம் குறித்து ஆர்ஜே பாலாஜி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


