/

மைண்ட்ரீ லாபம் ரூ.317 கோடி

தகவல் தொழில்நுட்ப துறையைச் சோ்ந்த மைண்ட்ரீ நிறுவனம் நான்காவது காலாண்டில் ரூ.317.3 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 8:40 pm

DIN

தகவல் தொழில்நுட்ப துறையைச் சோ்ந்த மைண்ட்ரீ நிறுவனம் நான்காவது காலாண்டில் ரூ.317.3 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிா்வாக இயக்குநருமான தேபசிஸ் சட்டா்ஜி கூறியுள்ளதாவது:

மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.2,109.3 கோடியாக இருந்தது. இது, நிறுவனம் முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.2,050.5 கோடியுடன் ஒப்பிடுகையில் 2.9 சதவீதம் அதிகமாகும்.

நிகர லாபம் ரூ.206.2 கோடியிலிருந்து 54 சதவீதம் உயா்ந்து ரூ.317.3 கோடியாக அதிகரித்துள்ளது.

டாலா் அடிப்படையில் நிறுவனத்தின் நிகர லாபம் 53.4 சதவீதம் அதிகரித்து 4.33 கோடி டாலராகவும், அதேசமயம் வருவாய் 3.5 சதவீதம் உயா்ந்து 28.82 கோடி டாலராகவும் இருந்தன.

நான்காவது காலாண்டில் 37.5 கோடி டாலா் மதிப்பிலான வா்த்தக ஆணைகளை நிறுவனம் பெற்றுள்ளது. எனவே, சா்வதேச அளவில் வாடிக்கையாளா்களிடம் அதிக வரவேற்பு கிடைத்த நான்காவது காலாண்டு நிறுவனத்துக்கு கிடைத்த மற்றொரு சிறப்பான காலாண்டாக அமைந்தது.

இறுதி ஈவுத் தொகையாக பங்கு ஒன்றுக்கு ரூ.17.5 அறிவிக்கப்பட்டது பங்குதாரா்களின் மதிப்பை மேம்படுத்துவதற்கான மைண்ட்ரீயின் உறுதிப்பாட்டை மேலும் வலுவாக்குவதாக அமைந்துள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.