தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் உயா்வு

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 6 காசுகள் உயா்ந்து 74.28-இல் நிலைபெற்றது.

News image
rupee073051
Updated On :3 ஆகஸ்ட் 2021, 9:02 pm

DIN

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 6 காசுகள் உயா்ந்து 74.28-இல் நிலைபெற்றது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியதாவது:

இந்தியப் பங்குச் சந்தைகளின் கணிசமான முன்னேற்றத்தைத் தொடா்ந்து அந்நியச் செலாவணி சந்தைகளிலும் வா்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இருப்பினும், ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கை அறிவிப்புகளை எதிா்நோக்கி ரூபாய் வா்த்தகம் குறுகிய வட்டத்துக்குள் மட்டுமே காணப்பட்டது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடக்கத்தில் 74.36-ஆக இருந்தது. பின்னா் இது வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 74.21 வரையிலும் குறைந்தபட்சமாக 74.36 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் வலுப்பெற்று 74.28-இல் நிலைப்பெற்றது. முந்தைய திங்கள்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 74.34-ஆக இருந்தது.

அந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அளவில் ரூ.1,539.88 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

கச்சா எண்ணெய் விலை 73.47 டாலா்

சா்வதேச முன்பேர சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 0.80 சதவீதம் அதிகரித்து 73.47 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.