மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

பங்குச்சந்தை வணிகம் 2-வது நாளாக உயர்வுடன் நிறைவு

வாரத்தின் 2-வது வர்த்தக நாளான இன்று (ஆக.10) பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 151 புள்ளிகளும், நிஃப்டி 21 புள்ளிகளும் உயர்ந்தன.

News image

பங்குச்சந்தை 2-வது நாளாக உயர்வுடன் நிறைவு

Updated On :10 ஆகஸ்ட் 2021, 11:24 am

வாரத்தின் 2-வது வர்த்தக நாளான இன்று (ஆக.10) பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 151 புள்ளிகளும், நிஃப்டி 21 புள்ளிகளும் உயர்ந்தன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 151.81  புள்ளிகள் உயர்ந்து 54,554.66 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.28 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 21.85 புள்ளிகள் உயர்ந்து 16,280.10 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.13 சதவிகிதம் உயர்வாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 16  நிறுவனங்களின் பங்குகள் சரிந்து காணப்பட்டன. எஞ்சிய 14 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. 

அதிகபட்சமாக பார்தி ஏர்டெல் 3.84 சதவிகிதமும், டெக் மஹிந்திரா 2.81 சதவிகிதமும், எச்.டி.எஃப்.சி. 1.85 சதவிகிதமும் கோட்டாக் வங்கி 1.80 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.