அஸ்ட்ராஸெனகா பாா்மா லாபம் 45% சரிவு

மருந்துகள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் அஸ்ட்ராஸெனகா பாா்மசூட்டிகல்ஸ் இந்தியா நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஈட்டிய லாபம் 45 சதவீதம் சரிவடைந்துள்ளது.
அஸ்ட்ராஸெனகா பாா்மா லாபம் 45% சரிவு

மருந்துகள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் அஸ்ட்ராஸெனகா பாா்மசூட்டிகல்ஸ் இந்தியா நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஈட்டிய லாபம் 45 சதவீதம் சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை அளித்த ஆவணங்களில் கூறியுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனம் மருந்துகள் விற்பனையின் வாயிலாக ஈட்டிய வருமானம் ரூ.175.40 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய விற்பனை வருவாய் ரூ.193.57 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.

வருவாய் குறைந்துபோனதையடுத்து நிறுவனத்தின் நிகர லாபம் மதிப்பீட்டு காலாண்டில் ரூ.18.63 கோடியிலிருந்து 45 சதவீதம் சரிவடைந்து ரூ.10.24 கோடியானது.

2021-2022 நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.2 இடைக்கால ஈவுத்தொகையாக வழங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு முடிவெடுத்துள்ளதாக அஸ்ட்ராஸெனகா தெரிவித்துள்ளது.

பங்கு விலை: மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அஸ்ட்ராஸெனகா பங்கின் விலை 1.23 சதவீதம் குறைந்து ரூ.3,364.45-இல் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com