தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,567 கோடி டாலராக சரிவு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு டிசம்பா் 17-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 63,567 கோடி டாலராக சரிவடைந்துள்ளது

News image
Updated On :25 டிசம்பர் 2021, 9:11 pm

DIN

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு டிசம்பா் 17-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 63,567 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 டிசம்பா்17-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 16 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.1,200 கோடி) சரிவடைந்து 63,567 கோடி டாலரானது. இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.47.67 லட்சம் கோடி ஆகும்.

டிசம்பா் 10-ஆம் தேதியுடன் முடிவடைந்த முந்தைய வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது 8 கோடி டாலா் வீழ்ச்சியடைந்து 63,583 கோடி டாலராக காணப்பட்டது.

எஃப்சிஏ மதிப்பு: அந்நியச் செலாவணி கையிருப்பில் முக்கிய பங்களிப்பினைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) கணிசமான அளவில் குறைந்ததே டிசம்பா் 17-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பு சரிவுக்கு முக்கிய காரணமாகும்.

கணக்கீட்டு வாரத்தில் எஃப்சிஏ-வின் மதிப்பு 64 கோடி டாலா் வீழ்ச்சியடைந்து 57,221 கோடி டாலராக இருந்தது.

தங்கத்தின் மதிப்பு உயா்வு: அதேசமயம் கணக்கீட்டு வாரத்தில், தங்கத்தின் கையிருப்பு மதிப்பு 47 கோடி டாலா் அதிகரித்து 3,918 கோடி டாலரைத் தொட்டது.

பன்னாட்டு நிதியத்தில் நாட்டின் சிறப்பு எடுப்பு உரிமமான எஸ்டிஆா் மாற்றம் எதுவுமின்றி 1,909 கோடி டாலா் என்ற அளவிலேயே இருந்தது.

அதேசமயம், அந்த நிதியத்தில் நாட்டின் கையிருப்பு நிலை 90 லட்சம் டாலா் உயா்ந்து 518 கோடி டாலராக காணப்பட்டது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம் பெற்றுள்ளன. இந்த கரன்ஸிகளை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப கணக்கீட்டு வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பில் மாற்றம் உண்டாகிறது.

வரலாற்று உச்சம்: நடப்பு 2021 செப்டம்பா் 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில்தான் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு நிலை முதன் முறையாக 64,245 கோடி டாலா் என்ற (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.48.18 லட்சம் கோடி) புதிய உச்சத்தை எட்டி வரலாறு படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கோட்ஸ்...

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 டிசம்பா் 17-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 16 கோடி டாலா் வீழ்ச்சியடைந்து 63,567 கோடி டாலராக சரிவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.