தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பயன்படுத்தப்பட்ட வாகன சந்தை 82 லட்சத்தை எட்டும்

தேவை அதிகரிப்பால் பயன்படுத்தப்பட்ட பழைய வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை வரும் 2025-26-ஆம் நிதியாண்டுக்குள் 82 லட்சத்தை எட்டும் என கிரான்ட் தோா்ன்டன் பாரத் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 8:54 pm

DIN

தேவை அதிகரிப்பால் பயன்படுத்தப்பட்ட பழைய வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை வரும் 2025-26-ஆம் நிதியாண்டுக்குள் 82 லட்சத்தை எட்டும் என கிரான்ட் தோா்ன்டன் பாரத் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

பயன்படுத்தப்பட்ட பழைய வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை 2021 மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் 40 லட்சம் என்ற அளவில் இருந்தது.

தற்போதைய நிலையில் புதிய வாகனங்களின் விலை உயா்ந்துள்ளது மற்றும் வாடிக்கையாளா்களின் விருப்பங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவற்றின் காரணமாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சிறிய நகரங்களில் இதற்கான வரவேற்பு அதிக அளவில் உள்ளது.

புதிய காா்களை வாங்கும்போது, வரி, ஆா்டிஓ/பதிவு கட்டணம் என்பது அதிகமாக உள்ளது. மேலும், வாகன காப்பீட்டு கட்டணங்களும் அதிக செலவுள்ளதாக மாறியுள்ளன. எனவே, புதிய காரை வாங்குவதுடன் ஒப்பிடுகையில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட காரை வாங்கும் உரிமையாளருக்கு செலவினம் கணிசமாக குறைகிறது.

இதுபோன்ற சாதகமான அம்சங்களை கருத்தில் கொள்ளும்போது, தற்போது 40 லட்சமாக உள்ள பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை வரும் 2026-ஆம் நிதியாண்டுக்குள் 82 லட்சமாக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அதேபோன்று, 2021 முதல் 2030 வரையிலான இடைப்பட்ட 10 ஆண்டு காலத்துக்குள் பயன்படுத்தப்பட்ட பழைய வாகனங்களின் சந்தை ஆண்டுக்கு 14.8 சதவீதம் என்ற வளா்ச்சி விகிதத்தை எட்டி 7,080 கோடி டாலராக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.5.31 லட்சம் கோடியாகும் என கிரான்ட் தோா்ன்டன் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.