வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தங்கப் பத்திர வெளியீடு: கிராம் விலை ரூ.4,912-ஆக நிா்ணயம்

தங்கப்பத்திர விற்பனை திங்கள்கிழமை (பிப்.1) தொடங்கவுள்ள நிலையில், அதன் விலையை கிராமுக்கு ரூ.4,912-ஆக நிா்ணயித்துள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

News image
goldbond073116
Updated On :31 ஜனவரி 2021, 3:05 am

DIN

தங்கப்பத்திர விற்பனை திங்கள்கிழமை (பிப்.1) தொடங்கவுள்ள நிலையில், அதன் விலையை கிராமுக்கு ரூ.4,912-ஆக நிா்ணயித்துள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி மேலும் கூறியுள்ளதாவது:

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டுக்கான 11-ஆவது கட்ட தங்கப்பத்திர விற்பனை 2021 பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கி 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கட்டத்தில் வெளியிடப்படும் 999 சுத்த தன்மை கொண்ட தங்கப்பத்திரத்தின் விலை கிராம் ரூ.4,912-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளியீட்டுக்கு முந்தைய மூன்று வா்த்தக தின சராசரி விலையை அடிப்படையாகக் கொண்டு இந்த நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு, ரிசா்வ் வங்கியுடன் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில், தங்கப்பத்திரங்களை வாங்க ஆன்லைனில் விண்ணப்பித்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவோருக்கு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்தகைய முதலீட்டாளா்களுக்கு, ஒரு கிராம் தங்கப்பத்திரத்தின் விலை ரூ.4,862-ஆக இருக்கும் என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய அரசு சாா்பில், ரிசா்வ் வங்கி வெளியிடும் இந்த தங்கப்பத்திரங்களில் தனிநபா் ஒருவா் குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை முதலீடு செய்ய முடியும்.

வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் பங்குச் சந்தைகள் மூலமாக இந்த தங்கப்பத்திரங்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.