இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை எழுச்சியுடன் தொடங்கிய பங்குச் சந்தை, இறுதியில் எதிர்மறையாக முடிந்தது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தாலும், நிலைத்து நிற்க முடியாமல் இறுதியில் 19 புள்ளிகளை இழந்து 52,861-இல் நிலைபெற்றது. இதைத் தொடர்ந்து, இரண்டு நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்ததால், அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. ஆனால், பெரும்பாலான நேரம் நேர்மறையாக வர்த்தகம் நடந்து வந்த நிலையில், பிற்பகலில் திடீரென முன்னணிப் பங்குகள் அதிக அளவு விற்பனையை எதிர்கொண்டன. குறிப்பாக டிசிஎஸ், இன்ஃபோஸிஸ், ரிலையன்ஸ், எஸ்பிஐ, எச்டிஎஃப்சி ஆகியவை வெகுவாகக் குறைந்ததால் சரிவு தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு ரூ.41 ஆயிரம் கோடி வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,386 பங்குகளில் 1,591 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,666 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 129 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 549 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 23 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. சந்தை மூலதன மதிப்பு ரூ.41 ஆயிரம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.231.34 லட்சம் கோடியாக இருந்தது.
2 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் காலையில் பலவீனத்துடன் 5.15 புள்ளிகள் குறைந்து 52,874.85-இல் தொடங்கி 53,129.37 வரை உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னர், 52,804.18 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 18.82 புள்ளிகளை (0.04 சதவீதம்) இழந்து 52,861.18-இல் நிலைபெற்றது. இதனால், காலையில் பெற்ற லாபம் அனைத்தும் பிற்பகலில் நிலைக்க முடியாமல் போனது. இதைத் தொடர்ந்து, இரண்டு நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
அல்ட்ரா டெக் சிமெண்ட் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 19 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 11 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. இதில் அல்ட்ரா டெக் சிமெண்ட் 3. 22 சதவீதம், எச்டிஎஃப்சி பேங்க் 2.63 சதவீதம், பஜாஜ் ஃபைனான்ஸ் 2.17 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், பஜாஜ் ஃபின்சர்வ், கோட்டக் பேங்க், இன்டஸ்இண்ட் பேங்க், டாடா ஸ்டீல், டைட்டன், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்டவையும் விலையுயர்ந்த பட்டியலில் வந்தன.
டெக் மஹிந்திரா சரிவு: அதேசமயம், டெக் மஹிந்திரா இரண்டாவது நாளாக மேலும் 2.30 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், டிசிஎஸ், மாருதி சுஸýகி, ரிலையன்ஸ், சன்பார்மா, இன்ஃபோஸிஸ், எம் அண்ட் எம், ஹெச்யுஎல், ஹெச்சிஎல் டெக், என்டிபிசி, எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்தன.
நிஃப்டி 42 புள்ளிகள் முன்னேற்றம்:
தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 741 பங்குகள்ஆதாயம் பெற்றன. 1,031 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி காலையில் பலவீனத்துடன் 15,813.75-இல் தொடங்கி 15,914.20 வரை உயர்ந்தது. பின்னர், 15,801.00 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 16.10 புள்ளிகளை (0.1 சதவீதம்) இழந்து 15,818.25-இல் நிலைபெற்றது. நிஃப்டி ஆட்டோ குறியீடு 1.74 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. ஐடி, பார்மா, பிஎஸ்யு பேங்க் குறியீடுகளும் 1-1.30 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. அதேசமயம் நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சர்வீஸஸ், பிரைவேட் பேங்க் குறியீடுகள் 1 சதவீதம் வரை உயர்ந்தன.

டாடா மோட்டார்ஸ் கடும் சரிவு:
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பட்டியலில் இடம்பெற்றுள்ள டாடா மோட்டார்ஸ் பங்குகள் அதிகம் விற்பனைக்கு வந்தன. இதனால், 8.52 சதவீதம் குறைந்து ரூ.316.60-இல் நிலைபெற்றது. வர்த்தகத்தின் போது ரூ.358.20-இல் இருந்து ரூ.311.50 வரை கீழே சென்றது. ஜேஎல்ஆர் வாகன உற்பத்தி பாதிக்கும் என்ற செய்தியின் காரணமாக டாடா மோட்டார்ஸ் பங்குகள் அதிகம் விற்பனையை எதிர்கொண்டதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரோடு மாவட்டத்தில் மநீம வாக்குகள் திமுகவுக்கு பலமா?

2.09 லட்சம் பேருக்கு நாய்க்கடி: ரேபிஸ் பாதிப்பால் 13 போ் உயிரிழப்பு
தமிழகத்தில் 7000-க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல்!
அதிமுக கூட்டணிதான் இயற்கையான கூட்டணி! டி.டி.வி. தினகரன் சிறப்பு நேர்காணல்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


