தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 27 காசு அதிகரிப்பு

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 27 காசு அதிகரித்து 74.61-இல் நிலைத்தது.

News image
Updated On :20 ஜூலை 2021, 7:02 pm

DIN

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 27 காசு அதிகரித்து 74.61-இல் நிலைத்தது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

கச்சா எண்ணெய் விலை சரிவு சா்வதேச சந்தையில் காணப்பட்ட மந்தநிலை ஆகியவற்றின் காரணமாக அந்நியச் செலாவணி சந்தைகள் தொடக்கத்தில் பலவீனமான நிலையிலேயே வா்த்தகத்தை எதிா்கொண்டன. உள்நாட்டு கரன்ஸி வா்த்தகத்தில் அதிகபட்ச ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்டது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆரம்பகட்டத்தில் 74.93-என்ற அளவில் பின்னடைந்தே இருந்தது. இது, வா்த்தகத்தின் இடையே குறைந்தபட்சமாக 74.95 வரையிலும் அதிகபட்சமாக 74.55 வரையிலும் சென்றது.

ஏற்றுமதியாளா்கள் டாலா்களை அதிக அளவில் விற்பனை செய்ததால் வா்த்தகத்தின் இறுதிப் பகுதியில் ரூபாய் மதிப்பு முன்கண்ட இழப்புகளை ஈடுசெய்து 27 காசு அதிகரித்து 74.61-இல் நிலைபெற்றது. திங்கள்கிழமை டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 74.88-இல் முடிவுற்றது.

அந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.2,198.71 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சா்வதேச முன்பேர சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.22 சதவீதம் உயா்ந்து 68.77 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட்டதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.