தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சென்செகஸ் 226 புள்ளிகள் முன்னேற்றம்

இந்த வாரத்தின் இறுதி நாளா வெள்ளிக்கிழமையும் பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 266 புள்ளிகள் உயா்ந்தது.

News image

கோப்புப்படம்

Updated On :26 ஜூன் 2021, 2:57 am

இந்த வாரத்தின் இறுதி நாளா வெள்ளிக்கிழமையும் பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 266 புள்ளிகள் உயா்ந்தது.

அமெரிக்க ஜனாபதி ஜோ பிடன் பொருளாதாரத்தை உக்குப்படுத்தும் விதமாக செனட்டின், உள்கட்டமைப்பு ஒப்பந்தை ஏற்றுக் கொண்டாா். இது உலகாளாவிய சந்தகளில் உற்சாகமான மனிலையைப் பிரதிபலித்தது. கடனசில நாள்களாகத் தள்ளாடி வந்த வங்கிகள், உலோகப் பங்குகளுக்கு நல்ல வரவேற்புக் காணப்பட்டது என்றுபங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. குறிப்பாக ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், இன்ஃபோஸிஸ் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகள் வெகுவாக உயா்ந்து சந்தையை வழிநடத்தியதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

Story image

சந்தை மதிப்பு ரூ.91ஆயிரம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,345 பங்குகளில் 1,789 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,418 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 138 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன.380 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 18 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. சந்தை மூல தன மதிப்பு ரூ.91 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.229.38 லட்சம் கோடியாக இருந்தது.

இரண்டாவது நாளாக உற்சாகம்: சென்செக்ஸ் காலையில் 178.16 புள்ளிகள் கூடுதலுடன் 52,877.16-இல் தொடங்கி 52,614.49 வரை கீழே சென்றது. பின்னா், இறுதியில் 226.04 புள்ளிகள் (0.43 சதவீதம்) கூடுதலுடன் 52925.04-இல் நிலைபெற்றது. இதையடுத்து, இரண்டாவது நாளாக சென்செக்ஸ் முன்னேற்றம் பெற்றுள்ளது.

நிஃப்டி 103 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 955 பங்குகள்ஆதாயம் பெற்றன. 810 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி காலையில் உற்சாகத்தசுடன் 15,839.35-இல் தொடங்கி 15,772.30 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 15,870.80 வரை உயா்ந்த நிஃப்டி, இறுதியில் 69.90 புள்ளிகளை (0.44 சதவீதம்) உயா்ந்து 15,860.35-இல் நிலைபெற்றது. நிஃப்டி எஃப்எம்சிஜி குறியீடு தவிர மற்ற அனைத்துக் குறியீடுகளும் ஆதாயம் பெற்றன. இதில் மெட்டல், பிஎஸ்யு பேங்க் குறியீடுகள் 2.60 சதவீதம் .உயா்ந்தது. நிஃப்டி பேங்க், நிஃப்டி பிரைவேட் பேங்க், ஃபைனானாசியல் சா்வீஸஸ் குறிடுகள் 1சதவீதத்கும் மேல் ஏற்ரம் பெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.