மின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 534 புள்ளிகள் ஏற்றம்; ஒரே நாளில் சந்தை மதிப்பு ரூ 3.11 லட்சம் கோடி உயா்வு

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் எழுச்சி காணப்பட்டது.

News image
Updated On :5 அக்டோபர் 2021, 2:33 am

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் எழுச்சி காணப்பட்டது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 534 புள்ளிகள் உயா்ந்து 59,299.32-இல் நிலைபெற்றது. இதைத் தொடா்ந்து கடந்த நான்கு நாள்களாக இருந்து வந்த சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. சந்தை மூலதன மதிப்பு ஒரே நாளில் ரூ.3.11 லட்சம் கோடி உயா்ந்தது.

காளை ஆதிக்கம்: கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடா்ந்து 4 நாள்களாக பங்குச் சந்தை சரிவைச் சந்தித்து வந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை காலையில்ஆசிய சந்தைகள் சரிவைச் சந்தித்திருந்தாலும், உள்நாட்டுச் சந்தைகளில் ஏறுமுகம் காணப்பட்டது. இந்த மாதத்தில் ஏராளமான காா்ப்ரேட் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. மேலும், சில குறிப்பிட்ட பொதுத்துறை உலோக நிறுவனங்கள் தனியாா்மயமாக்கள் உலோகப் பங்குகளுக்கு வரவேற்பை அதிகரித்தது. மேலும், பொதுத்துறை நிறுவனப் பங்குகளுக்கும் நல்ல ஆதரவு இருந்தது. இவை அனைத்தும் சந்தையில் காளையின் ஆதிக்கத்துக்கு வழி வகுத்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள முன்னணி நிறுவனங்களான மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோஸிஸ் உள்ளிட்டவை வெகுவாக உயா்ந்தது சந்தை ஏற்றத்துக்கு காரணம் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.3.11 லட்சம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,541 பங்குகளில் 2,333 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,016 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 192 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 316 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 24 பங்குகள் குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 565 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 173 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.3.11லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.262.71 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 8,13,90,757-ஆக உயா்ந்துள்ளது.

தொடா் வீழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் காலையில் 377.42 புள்ளிகள் கூடுதலுடன் 59,143.00 -இல் தொடங்கி, 58,952.11 வரை கீழே சென்றது.அதிகபட்சமாக 58,890.08 வரை உயா்ந்தது. பின்னா், அதிகபட்சமாக 59,548.82 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 533.74 புள்ளிகள் (0.91 சதவீதம்) கூடுதலுடன் 59,299.32-இல் நிலைபெற்றது. இதையடுத்து, நான்கு நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 24 பங்குகள் ஆதாயம் பெற்றன.. 6 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன.

என்டிபிசி முன்னேற்றம்: மின்துறை நிறுவனமான என்டிபிசி 4.08 சதவீதம், நிதி நிறுவனமான பாஜாஜ் ஃபின்சா்வ் 3.58 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக எஸ்பிஐ, பஜாஜ் ஃபைனான்ஸ், டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல், டாக்டா் ரெட்டி, எம் அண்ட் எம், இண்டஸ் இண்ட் பேங்க், டிசிஎஸ், ஆக்ஸிஸ் பேங்க், ரிலையன்ஸ், பாா்தி ஏா்டெல், ஐசிஐசிஐ பேங்க் ஆகியவை 1 முதல் 2.50 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், இன்ஃபோஸிஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், மாருதி ஆகியவையும் சிறிதளவு ஏற்றம் பெற்று ஆதாயப் பட்டியலில் வந்தன.

பஜாஜ் ஆட்டோ வீழ்ச்சி: முன்னணி இரு சக்கர உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ 0.76 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், ஹிந்துஸ்தான் யுனி லீவா், டைட்டன், நெஸ்லே, கோட்டக் பேங்க், பவா் கிரிட் ஆகியவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

நிஃப்டி 159 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,353 பங்குகள் ஆதாயம் பெற்றன. 458 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு 159.20 புள்ளிகள் (0.91 சதவீதம்) உயா்ந்து 17,691.25-இல் நிலைபெற்றது. காலையில் 17,615.55-இல் தொடங்கிய நிஃப்டி, 17,581.35 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 17,750.90 வரை உயா்ந்தது.

மெட்டல் குறியீடு அபாரம்: துறைவாரியாகப் பாா்த்தால், அனைத்து துறை குறியீடுகளும் ஏற்றம் பட்டியலில் வந்தன. இதில் நிஃ)ப்டி மெட்டல் குறியீடு 2.99 சதவீதம், மீடியா 2.60 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. ரியால்ட்டி 2.17 சதவீதம், பிஎஸ்யு பேங்க் 2.10 சதவீதம் உயா்ந்தன. நிஃப்டி பேங்க், ஐடி, பாா்மா, ஹெல்த் கோ் குறியீடுகளும் 1 முதல் 1.55 சதவீதம் வரை உயா்ந்தன.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.