தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 18 காசுகள் வீழ்ச்சி

அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 18 காசுகள் வீழ்ச்சி கண்டது.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 10:55 pm

DIN

அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 18 காசுகள் வீழ்ச்சி கண்டது.

இதுகுறித்து சந்தை ஆய்வாளா்கள் கூறியது:

கச்சா எண்ணெய் விலை உயா்வு மற்றும் சா்வதேச சந்தையில் டாலருக்கான தேவை அதிகரிப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் அந்நியச் செலாவணி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், வெளிநாட்டு முதலீடு வெளியேற்றமும் ரூபாய் மதிப்பு சரிவுக்கு வழிவகுத்தது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு பலவீனமடைந்து 74.98-ஆக காணப்பட்டது. இது, வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 74.97 வரையிலும், குறைந்தபட்சமாக 75.10 வரையிலும் சென்றது. வா்த்தகத்தின் இறுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 18 காசுகள் வீழ்ச்சியடைந்து 75.08-இல் நிலைபெற்றது. வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் இதன் மதிப்பு 74.90-ஆக இருந்தது என ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய் விலை 86 டாலா்

சா்வதேச முன்பேர சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 0.56 சதவீதம் அதிகரித்து 86.01 அமெரிக்க டாலருக்கு வா்த்தகம் ஆனதாக சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.