தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வெளியானது 'ரெட்மி 10 பிரைம்' ஸ்மார்ட்போன்

ஸியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி தன்னுடைய புதிய தயாரிப்பான 'ரெட்மி 10 பிரைம்' ஸ்மார்ட்போனை நேற்று (செப்-2)  இந்தியாவில் வெளியீடு செய்திருக்கிறது.

News image
வெளியானது 'ரெட்மி 10 பிரைம்' ஸ்மார்ட்போன்
Updated On :3 செப்டம்பர் 2021, 9:39 am

DIN

ஸியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி தன்னுடைய புதிய தயாரிப்பான 'ரெட்மி 10 பிரைம்' ஸ்மார்ட்போனை நேற்று (செப்-2)  இந்தியாவில் வெளியீடு செய்திருக்கிறது.

ரெட்மி 10 பிரைம் என்கிற பெயரில் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போனின் விளம்பரத்தில்  ' ஆல் ரவுண்டு சூப்பர் ஸ்டார் ' என்கிற அறிவிப்போடு ஸியோமி நிறுவனம்  பகிர்ந்திருக்கிறது.

ரெட்மி 10 பிரைம் -ன் சிறப்பம்சங்கள் :

* 6.5 இன்ச் அளவுகொண்ட  எச்டி திரை 

* மீடியாடெக் ஹெலியோ ஜி 88 , சிஓசி அமைப்பை கொண்டிருக்கிறது 

*உள்ளக நினைவகம் 4 மற்றும் 6 ஜிபி , கூடுதல் நினைவகம் 64 மற்றும் 128 ஜிபி 

*பின்பக்கம் 50 எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும் , 8 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க கேமரா 8 எம்பி அளவை கொண்டிருக்கிறது.

*6000 எம்ஏஎச்  பாட்டரி வசதி 

*ஆன்டிராய்டு 11 ஒஸ் 

* டைப் - சி போர்ட் 

மேலும் முதலில் நீல நிறத்தில் மட்டுமே வெளியாகும் ரெடிமி 10 பிரைம் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விற்பனை விலை 4ஜிபி+64ஜிபி அளவுகொண்டவை  ரூ.12,499 ஆகவும் 6ஜிபி+128ஜிபி நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.14,999 க்கும் விற்பனை செய்யப்பட இருக்கிறது. வருகிற செப்டம்பர் - 7 முதல் இந்த ஸ்மார்ட்போனை  அமேசான் மற்றும் ரெட்மி விற்பனை கடைகளில்  பெற்றுக்கொள்ளலாம் எனவும்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

மேலும் ஸியோமி நிறுவனம் 'ஏர்பட்ஸ்' ஒன்றையும் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.