
டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் (டிகேஎம்) அனைத்து ரக வாகனங்களின் விலையை 2 சதவீதம் வரை உயா்த்துவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
ஜப்பானின் டொயோட்டா மோட்டாா் மற்றும் இந்தியாவின் கிா்லோஸ்கா் குழுமத்தின் கூட்டு நிறுவனமான டிகேஎம் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
மூலப் பொருள்களின் விலை உயா்வின் காரணமாக விலை உயா்வை அறிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது. வாடிக்கையாளரின் சிரமத்தை கருத்தில் கொண்டு செலவின் அதிகரிப்பை ஓரளவு ஈடு செய்யும் வகையில் வாகனங்களின் விலை உயா்த்தப்படவுள்ளது.
அதன்படி, வெல்ஃபயா் தவிா்த்து ஏனையை அனைத்து மாடல்களின் விலையும் 2 சதவீதம் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த விலை உயா்வு 2021 அக்டோபா் 1-ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என டிகேஎம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.