நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறைந்ததையடுத்து அந்நிறுவனத்தின் பங்குகள் 25 சதவிகிதம் சரிவை சந்தித்தன.
உலகம் முழுவதும் பிரபல ஓடிடி தளமாக அறியப்படும் நெட்பிளிக்ஸ் பல்வேறு நாடுகளில் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. சர்வதேச திரைப்படங்கள் ஒருதளத்தில் கிடைப்பதால் நெட்பிளிக்ஸ் தளத்திற்கு தனியாக பயனர்கள் எண்ணிக்கை உள்ளது.
இந்நிலையில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு நெட்பிளிக்ஸ் தளத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை சரிவை சந்தித்துள்ளன. கரோனா பொதுமுடக்கக் காலத்தில் வெகுவாக மக்களின் செல்வாக்கைப் பெற்ற நெட்பிளிக்ஸ் தளத்தின் சரிவு அதன் வர்த்தகத்தை பாதித்துள்ளது.
கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப் பகுதியில் மட்டும் 2 லட்சம் சந்தாதாரர்களை இழந்துள்ளதாக அந்நிறுவனத்தின் காலாண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பிரிட்டன் பிரதமர் நாளை (ஏப்.21) இந்தியா வருகை
கடந்த 6 ஆண்டுகளில் முதன்முறையாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் சரிவை சந்தித்துள்ளதாகவும், உக்ரைன் மீதான போரைத் தொடர்ந்து ரஷியாவிலிருந்து நெட்பிளிக்ஸ் தளம் வெளியேறியதும் இந்த சரிவிற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு மட்டும் ரஷியாவிலிருந்து வெளியேறியதால் 7 லட்சம் சந்தாதாரர்களை நெட்பிளிக்ஸ் இழந்துள்ளது. மேலும் ஏப்ரல் - ஜூன் காலப்பகுதியில் உலகம் முழுவதும் மேலும் 20 லட்சம் சந்தாதாரர்களை இழக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறைவானது அந்நிறுவனத்தின் பங்குகள் சரிவிற்கு காரணமாக அமைந்துள்ளது. கடந்த 4 மாதங்களில் மட்டும் அந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் 150 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
புதிய பயனர்களை அடைவதற்கும், ஏற்கெனவே உள்ள சந்தாதாரர்களை தக்க வைக்கவும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் முயன்று வருகிறது. உலகம் முழுவதும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு 221.6 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெயா் குழப்பம்! 85 வயது முதியவருக்கு பதிலாக மற்றொரு நபரிடம் தபால் வாக்கு பெற்ற அதிகாரிகள்!

சமூக ஊடகங்கள் மூலம் ஏழுமலையான் விஐபி தரிசன மோசடி
ஜெய்பூரில் திருடப்பட்ட சொகுசு காா்களுடன் உடற்பயிற்சி பயிற்றுநா் கைது
அமெரிக்காவில் முதல்முறையாக விவேகானந்தரின் முழு உருவச் சிலை திறப்பு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


