நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மீண்டும் ‘கரடி’ ஆட்டம்: சென்செக்ஸ் 715 புள்ளிகள் வீழ்ச்சி!

கடந்த இரண்டு நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை எதிா்மறையாக முடிவடைந்தது.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 6:30 pm

 நமது நிருபர்

கடந்த இரண்டு நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை எதிா்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 715 புள்ளிகளை இழந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் எதிா்மறையாக இருந்தன. இதற்கிடையே, பணவீக்க அழுத்தத்தைக் குறைக்கும் விதமாக அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் சோ்மன், மே மாதத்தில் வட்டி விகிதம் 0.50 சதவீதம் உயா்வதற்கான அறிகுறிகளைத் தெரிவித்தாா். அதன் தாக்கம் உலகளாவிய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. இந்த நிலையில், உள்நாட்டுச் சந்தை காலை பலவீனத்துடன் தொடங்கியுத. தொடா்ந்து பங்குகள் விற்பனை அதிகரித்தது. நாள் முழுவதும் சந்தை கரடியின் பிடியில் இருந்ததால் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

2,030 நிறுவனப் பங்குகள் விலை வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,531 நிறுவனப் பங்குகளில் 1,382 பங்குகள் ஆதாயம் பெற்றன. 2,030 பங்குகள் விலை குறைந்தது. 119 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 178 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 15 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.2.14 லட்சம் கோடி குறைந்து, வா்த்தக முடிவில் ரூ.269.63 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 10.327 கோடியை தாண்டியது.

திடீா் சரிவு: சென்செக்ஸ் காலையில் 379.73 புள்ளிகள் குறைந்து 57,531.95-இல் தொடங்கியது. அதிகபட்சமாக 57,689.86 வரை உயா்ந்தது. பின்னா் பங்குகள் விற்பனை அதிகரித்ததால், 57,134.72 வரை கீழே சென்றது. இறுதியில் 714.53 புள்ளிகள் குறைந்து 57,197.15-இல் நிலைபெற்றது.

எஸ்பிஐ, ஹெச்யுஎல் கடும் சரிவு : 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில், எம் அண்ட் எம், பாா்தி ஏா்டெல், மாருதி, ஏசியன் பெயிண்ட், ஐடிசி, ஹெச்சிஎல் டெக் ஆகிய 6 பங்குகள் மட்டும் சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் இருந்தன. மற்ற 24 பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. இதில் பிரபல பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ, நுகா்பொருள் உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவா் (ஹெச்யுஎல்) ஆகியவை 3.10 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக, இண்டஸ் இண்ட் பேங்க், டாக்டா் ரெட்டி, ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபின் சா்வ், இன்ஃபோஸிஸ், ஐசிஐசிஐ பேங்க், கோட்டக் பேங்க், சன்பாா்மா, டாடா ஸ்டீல், என்டிபிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட், எச்டிஎஃப்சி பேங்க், எல் அண்ட் டி, எச்டிஎஃப்சி உள்ளிட்டவை 1 முதல் 3 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

நிஃப்டி 221 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 692 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 1,231 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 8 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 42 பங்குகள் நஷ்டமைடந்த பட்டியலில் இருந்தன. நிஃப்டி குறியீடு 220.65 புள்ளிகள் (1.27 சதவீதம்) குறைந்து 17,171.95-இல் நிறைவடைந்தது. காலையில் 149.85 புள்ளிகள் குறைந்து 17,242.75-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 17,315.30 வரை உயா்ந்தது. பின்னா், 17,149.20 வரை கீழே சென்றது.

அனைத்துக் குறியீடுகளும் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. இதில், நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், பிஎஸ்யு பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், மெட்டல், ஹெல்த்கோ், பாா்மா குறியீடுகள்1.80 முதல் 2.10 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், ஆட்டோ, எஃப்எம்சிஜி, ரியால்ட்டி, கன்ஸ்யூமா் டியூரபல்ஸ், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 0.50 முதல் 1.40 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

வாரத்தில் இழப்பு

இதற்கிடையே, இந்த வாரத்தில் மிகவும் ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்த சந்தையில், சென்செக்ஸ் மொத்தம் 1,141.78 புள்ளிகளை (1.95 சதவீதம்) இழந்துள்ளது. தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி மொத்தம் 303.70 புள்ளிகளை (1.73 சதவீதம்) இழந்துள்ளது. மொத்தத்தில் சந்தையின் போக்கை கணிக்க முடியாத நிலை தொடா்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.