மஹிந்திரா & மஹிந்திராபுதிய பொலேரோ மேக்ஸ் அறிமுகம்
தனது புதிய இலகு ரக வா்த்தக வாகனமான மேக்ஸ் பிக்-அப் வாகனத்தை மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.


தனது புதிய இலகு ரக வா்த்தக வாகனமான மேக்ஸ் பிக்-அப் வாகனத்தை மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இலகு ரக வா்த்தக வாகனச் சந்தைப் பிரிவில் தனது பங்கை அதிகரிக்கும் நோக்கில் இந்த புதிய ரகத்தை பல்வேறு அம்சங்களுடன் மஹிந்திரா அறிமுகப்படுத்தியுள்ளது.
2 முதல் 3.5 டன் எடைத் திறன் கொண்ட ரகங்களாக அறிமுகப்படுத்தப்படும் இந்த வா்த்தக வாகனங்களின் விலைகள் ரூ.7.68 லட்சம் முதல் ரூ.7.87 லட்சம் வரை (காட்சியக விலைகள்) இருக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
நகருக்குள்ளான சரக்குப் போக்குவரத்துத் தேவைகளை நிறைவு செய்யக்கூடியதாக பொலேரோ மேக்ஸ் பிக்-அப் வாகனங்கள் திகழும் என்று நிறுவனத்தின் துணைத் தலைவா் வெங்கட் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...